சர்வதேச கிரிகெட் சம்மேளனம் நடத்தும் உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணி பிரத்யேகமான ஒரு சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளது.


ஐசிசி உலகக்கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒருநாள் உலகக்கோப்பை தொடரை நடத்தி வருகிறது. அதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 7 முறை உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதேநேரம், அதிகமுறை உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற அணி என்ற மோசமான சாதனையை, கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி தன்னக்கத்தே கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவ்வாறு இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, உலகக்கோப்பையை வென்ற அணிகளின் நிலை அதன் பிறகு என்ன ஆனது என்பது எத்தனை பேருக்கு தெரியும். 


இன்னுமும் மீளாத மேற்கிந்திய தீவுகள் அணி:


கிரிக்கெட் உலகின் அசைக்க முடியா அணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள், 1975ம் ஆண்டு நடைபெற்ற அறிமுக தொடரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வென்ற கையோடு, 1979ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அதிரடியாக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 92 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. ஆனால், அதன் பிறகு இதுவரை ஒருமுறை கூட மேற்கிந்திய தீவுகள் அணி, ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது இல்லை. நடப்பாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு, மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.


சறுக்கிய ஆஸ்திரேலியா..!


ஐசிசி தொடர்களை வெல்வதில் கைதேர்ந்த அணியாக விளங்கிய ஆஸ்திரேலிய அணி, 1987ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அதற்கடுத்த 12 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தடுமாறும் பாகிஸ்தான்:


1992ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆனால், இந்த முறை பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 250 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல், 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த மாபெரும் தருணத்தை தொடர்ந்து இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையை நுகரவில்லை.


உடைந்து நொறுங்கும் மேற்கிந்திய தீவுகள்:


1979ம் ஆண்டிற்குப் பிறகு ஒருவழியாக கடந்த 2016ம் ஆண்டு ஐசிசியின் டி-20 உலகக்கோப்பையை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி. அதிலும், இங்கிலாந்து அணிய்யை தான் வீழ்த்தி இருந்தது. இந்நிலையில், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியானது நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுடன் எல்லாம் தோல்வியுறும் அளவிற்கு கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளது. இதிலிருந்து அந்த அணி மீண்டு வருமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.


தோனி செஞ்சது தப்பா?


இப்படி இங்கிலாந்து அணியின் ராசி உலக நாடுகளை மிரட்ட அது, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை என்பது தான் உண்மை. காரணம், கடந்த 2013ம் ஆண்டு ஐசிசியால் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியை, இங்கிலாந்து அணியை வீழ்த்தி தான் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இருந்தது. ஆனால், அதன்பிறகு எத்தனையோ ஐசிசி தொடர்கள் நடைபெற்று இருந்தாலும், அதில் ஒன்றில் கூட இந்திய அணி கோப்பையை வென்றது இல்லை. இதனால், மற்ற அணிகளுக்கு தொடரும் மோசமான நிலையே, இந்திய அணிக்கும் நிண்ட காலத்திற்கு தொடருமே என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.