முஹம்மது வசீம் (UAE)


யுஏஇ அணி வீரர்  முஹம்மது வசீம் தன்னுடைய நாட்டிற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட வசீம் 21 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்படி, மொத்தம் 806 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 163.15 ஆகும். 2023 ஆம் ஆண்டில் டி20 யில் வசீமின் அதிகபட்ச ஸ்கோர் 91. இந்த ஆண்டு மட்டும் தன்னுடைய அணிக்காக 74 பவுண்டரிகள் மற்றும் 51 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.


யஷஸ்வி ஜெய்ஸ்வால் (IND)


இந்திய அணியின் இளம் வீரர்யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.159.25 என்ற ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 33.07 என்ற சராசரியுடன் 430 ரன்கள் எடுத்துள்ளார். அதன்படி, 50 பவுண்டரிகள் மற்றும் 22 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அதேபோல், மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்தையும் பதிவு செய்துள்ளார். 


சூர்யகுமார் யாதவ் (IND)


இந்திய அணியின் டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ் டி20 தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 வீரராக இருக்கிறார். 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 18 டி 20 போட்டிகளில் விளையாடி 733 ரன்களை குவித்துள்ளார். 48.86 என்ற சராசரி மற்றும் 155.95 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்கும் சூர்யகுமார் 2 சதங்கள் மற்றும் 5அரைசதங்களை பதிவு செய்துள்ளார். அதேபோல், 43 சிக்ஸர்கள் மற்றும் 61 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இவர் தலைமையிலான இந்திய டி20 அணி அண்மையில் உள்நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


நிக்கோலஸ் பூரன் (WI)


2023 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் நிக்கோலஸ் பூரன். ODI மற்றும் T20I போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னரும் 13 டி20 போட்டிகளில் விளையாடி 162.71 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 384 ரன்களை எடுத்தார்.  அதேபோல், இரண்டு அரை சதங்களை பதிவு செய்துள்ள இவர் 26 பவுண்டரிகள் மற்றும் 27 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்.


சிக்கந்தர் ராசா (ZIM)


ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ராசா2023 இல் 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 6 அரைசதங்களை விளாசியுள்ள இவர்,150.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 515 ரன்களை குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 82* ஆகும். அதேபோல், பந்து வீச்சிலும் அசத்திய இவர் 4/24 என்ற அடிப்படையில் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் ஜிம்பாப்வேயின் நிரந்தர கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ரிங்கு சிங் (IND)


அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்த ஆண்டு அறிமுகமானவர் ரிங்கு சிங். 2023 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில், ரிங்கு 180.66 ஸ்டிரைக் ரேட் மற்றும் 68* என்ற அதிகபட்ச ஸ்கோருடன் ஒரு அரைசதமும் அடித்து 262 ரன்கள் எடுத்தார். அதேபோல், இந்த ஆண்டு டி20 போட்டிகளில் மொத்தம் 26 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதோடு இந்திய அணியின் சிறந்த பினிஷராகவும் பார்க்கப்படுகிறார் ரிங்கு சிங்.


ஷாகிப் அல் ஹசன் (BAN)


வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 133.65 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 139 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரை 6.12 என்ற அடிப்படையில் 5/22 என 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


ரவி பிஷ்னோய் (IND)


இந்திய அணியின் லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்படி அவர் விளையாடிய 11 போட்டிகளில், பிஷ்னோய் 18 விக்கெட்டுகளை 3/24 என்ற அடிப்படையில் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.


அர்ஷ்தீப் சிங் (IND)


அர்ஷ்தீப் சிங் டி20 போட்டிகளில் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளராக பார்க்கப்படுகிறார். அதன்படி, 21 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், டி20 உலகக் கோப்பையில் கவனிக்கத்தக்க வீரராக இருக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


அல்சாரி ஜோசப் (WI)


வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் அல்சாரி ஜோசப் அந்த அணிக்காக மொத்தம் 9 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில், மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5/40 என்ற அடிப்படையில் இருக்கும் இவர் 150 கி.மீ வேகத்தில் ஸ்விங் செய்து எதிரணி பேட்டர்களை மிரட்டினார்.


தஸ்கின் அகமது (BAN)


வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது 2023 இல் எட்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்படி 4/16 என்ற அடிப்படையில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த வீரர்கள் தான் 2023 ஆம் ஆண்டின் சிறந்த T20I XI ஆக பார்க்கப்படுகிறது.