வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள  ஹர்த்திக் பாண்டியா, தனது நண்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்ட் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனை தனது டிவிட்டரில் ஹர்த்திக் பாண்டியா நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்


ஐபிஎல் என்பது தொடங்கப்பட்ட காலம் முதலே உலகளாவிய அளவில், சர்வதேச கிரிக்கெட் வீரர்களிடம் ஏற்பட்டுள்ள இணக்கமும் நெருக்கமும் அனைவரும் பாராட்டும் படியாக மாறியுள்ளது. குறிப்பாக அனல் பறக்கும் சர்வதேச போட்டிகளின் போது இரு நாட்டு வீரர்களுக்கு இடையில் ஏற்படும் மோதல்களை களத்திலேயே சக வீரர்கள் அன்போடும் உரிமையோடும் பேசி, மோதலை மறக்க வைக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. 


இந்தியாவை பொறுத்த மட்டில் வெளிநாட்டு வீரர்களை இந்திய வீரர்கள் நட்பு பாராட்டுவதையும் அதனை அவர்கள் களத்தில் வெளிப்படுத்தும் விதத்தையும் தங்கள் நட்பைக் கொண்டாடுவதைப்போல் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் அடையாளம் காணப்பட்ட வீரர்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய விராட் கோலி, கிரிஸ் கெயில் நட்பு, விராட் கோலி டிவிலியர்ஸ் நட்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.






அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும் குஜராத் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை அணியின் ஆல்ரவுண்டரும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரருமான கீரன் பொல்லார்ட் இருவரும்  மும்பை அணிக்காக விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வருகின்றனர்.  தற்போது இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் ஐந்து டி20 போட்டிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரை வென்றுள்ளது. அதனைத் தொரந்து நடைபெற்று வரும் ஐந்து டி20 போட்டிகளில் ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. மீதம் உள்ள இரண்டு டி20 போட்டிகளையும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் அமெரிக்கா சென்றுள்ளனர்.


இதற்கிடையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது நண்பரான கீரன் பொல்லார்ட் வீட்டிற்குச் சென்றுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பொல்லார்ட் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு ஹர்திக் பாண்டியா கூறியுள்ளதாவது, எனது கரிபீயன் பயணம் என்பது எனது சகோதரர் கிங் பொல்லார்ட் வீட்டிற்கு செல்லாமல் முடியாது என குறிப்பிட்டுள்ளார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண