உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னால் கேப்டனுமான ஏபி டிவிலியர்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிவிலியர்ஸ், ”இது ஒரு நம்ப முடியாத பயணம். ஆனால், நான் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது மூத்த சகோதரர்களுடன் விளையாடத் தொடங்கியது முதல் நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாட்டை விளையாடினேன். இப்போது, 37 வயதில் அந்தச்சுடர் அவ்வளவு பிரகாசமாக எரியவில்லை.” என பதிவிட்டிருந்தார்.


 நேற்று முன்தினம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஐபிஎல் பர்பிள் கேப் வின்னர், ஹர்ஷல் பட்டேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறார். அறிமுகத்திற்கான இந்திய அணி தொப்பியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜீத் அகார்கரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டு தனது முதல் போட்டியிலேயே 2 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். 


இந்தநிலையில், ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும்போது அவருக்கு பந்தை எப்படி போட வேண்டும் என்று ஏபிடி கொடுத்த அட்வைஸ் குறித்து ஹர்ஷல் பட்டேல் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,  ஏபிடி என் கிரிக்கெட் பயணத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரின்போது பெங்களூர் அணி ஓய்வறையில் டிவிலியர்ஸ் முன்பு ஒரு கேள்வியை முன்வைத்தேன். அதில், ஒரு சில நேரங்களில் என் நல்ல பந்துகளை பேட்ஸ்மேன்கள் அடித்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன். 



அதற்கு பதிலளித்த டிவிலியர்ஸ், எந்த ஒரு பேட்ஸ்மேன்களுக்கும் நீ போடும் நல்ல பந்தை அடித்து விட்டால் உடனடியாக அடுத்த பந்தை மாற்றி வீசவேண்டாம். நீ எப்பொழுதும் போல தொடர்ந்து நல்ல பந்துகளை வீச வேண்டும். நல்ல பந்தை அடிக்கிறார் என்று நீ மாற்றினால் தொடர்ந்து அடி வாங்க வேண்டியதுதான். எனவே நல்ல பந்துகளை எப்போதும் அடித்து கொண்டே இருக்க முடியாது, ஒரு பந்தாவது அவரது விக்கெட் வீழ்த்தும் என்று தெரிவித்தார். மேலும், டிவில்லியர்ஸ் கொடுத்த இந்த அட்வைஸ் தான் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் 184 போட்டிகளில் 3 சதம், 40 அரைசதங்கள் உள்பட 5,162 ரன்களை பெற்றுள்ளார். அதேபோல், கடந்த ஐபிஎல் தொடரில் ஹர்சல் பட்டேல் 15 போட்டிகளில் 32 விக்கெட்களை வீழ்த்தி ஒரு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண