இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ், யுபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என 5 முக்கிய அணிகளுக்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தை மும்பையில் நடத்தியது. 


இந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ. 3.4 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதேபோல், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 1.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படார். 


இந்தநிலையில், மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் ஏலம் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகளிர் பிரீமியர் லீக் 2023க்கான அட்டவணையை அறிவித்தது. அதன்படி, மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் மொத்தம் 20 லீக் போட்டிகளும், 2 ப்ளேஆஃப் போட்டிகளையும், 23 நாட்களுக்குள் நடத்த திட்டமிட்டுள்ளது. 


மேலும், மோதலுடன் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் மார்ச் 4 ஆம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான லீக் போட்டியுடன் முதல் சீசன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி தொடங்கும் முதல் போட்டி மட்டும் மாலை 3.30 மணிக்கு என்றும், மற்ற போட்டிகள் அனைத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.      



   


மேலும், லீக் சுற்றின் கடைசி போட்டியானது UP வாரியார்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே மார்ச் 21 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. 


அதேபோல், எலிமினேட்டர் போட்டி மார்ச் 24 ஆம் தேதி DY பாட்டீல் மைதானத்திலும், இறுதிப் போட்டி மார்ச் 26 ஆம் தேதி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.