Pandya Brothers meets Amit Shah: இந்திய கிரிக்கெட் வீரர்களான பாண்டயா சகோதரர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
பாண்டயா சகோதர்கள் அமித்ஷா சந்திப்பு
இந்திய கிரிக்கெட் அணியில் பகுதி நேர கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் செயல்படுபவர் ஆல்ரவுண்டர் ஹ்ர்திக் பாண்டயா. இவர் தனது அண்ணனும் கிரிக்கெட் வீரருமான குர்ணல் பாண்டயாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை ஹர்திக் பாண்டயா மற்றும் குர்ணல் பாண்டயா ஆகியோர் தங்களது சமூக வலைதலப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும், அந்த புகைப்படங்களுடன், “ உங்களது பொன்னான நேரத்தினை எங்களுடன் செலவிட அழைத்ததற்கு மிகவும் நன்றி. இது எங்களுக்கு பாக்கியமாகவும், பெருமையாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணம்..?
இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் என பலதரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஹர்திக்பாண்ட்யா 15வது ஐ.பி.எல். போட்டித் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி கோப்பையை வென்று அசத்தியிருந்தார். இதனால், அவருக்கு இந்திய அணியில் பகுதி நேர கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவர் உள்ளார். பி.சி.சி.ஐ. செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களது சந்திப்புக்கு இடையில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவது குறித்து பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
வரும் 2023ம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் 3ம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டியில் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டனாக செயல்பட்டு தொடரை வென்று கொடுத்தார். மேலும், டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் முறையாக இவரது தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி தொடரைக் கைப்பற்றி அசத்தியது.