இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா இரு தினங்களுக்கு முன்பு தனது மகன் அகஸ்தியருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அந்த வீடியோவில், ஹர்திக் தனது மகன் அகஸ்தியருக்கு பேட் செய்யவும், சிக்ஸர் அடிப்பதற்கும் உதவி செய்தார். அவர்கள் வீட்டிற்குள் பிளாஸ்டிக் பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய காட்சியில் அந்த குட்டி குழந்தை ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து பேட்டை உயர்த்தும் நிகழ்வு க்யூட்டாக  உள்ளது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 


அதன் பின்னர் தனது தந்தை ஹர்திக் பாண்ட்யாவிற்கு அகஸ்தியா பந்து வீசிய காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஹர்திக்" எங்களது நட்சத்திர வீரர் அகஸ்தியா இல்லத்தில் பாக்ஸிங் டே போட்டியில் விளையாடி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். 






முன்னதாக, ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் ஹர்திக் பாண்ட்யா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த தொடரில் ஒரு போட்டியில்கூட பந்துவீசவில்லை. அவரது பேட்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் அவர் உலககோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். அப்போதே அவரது தேர்வு குறித்து பலரும் விமர்சித்தனர். அந்த தொடரிலும் இந்தியா ஆடிய 5 போட்டிகளிலும் சேர்த்து 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். எந்த விக்கெட்டும் வீழ்த்தவில்லை.  சிறிய அணிகளுக்கு எதிராக மட்டும் சிறப்பாக பேட் செய்தார்.


அவரது மோசமான பார்ம், உடல்தகுதி காரணமாக அவரை நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், முடிவுற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கவில்லை. இந்திய அணி இந்த தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலில் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று ஹர்திக் பாண்ட்யா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண