இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் விளையாடிய ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் டெஸ்டில் 417 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் நான்காவது இடத்தில் உள்ளார். 


இந்தநிலையில், நேற்று இவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வரவேண்டும். அந்தவகையில் என்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் அளித்த என மனதுக்கு நெருக்கமான கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடை பெறுகிறேன். இந்த 23 ஆண்டு காலம் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி" என்று தெரிவித்திருந்தார். 






 


இவருடைய ஓய்வுக்கு பிறகு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இவர் கடைசியாக அவர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில்,  ஹர்பஜன் சிங் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கங்குலி மற்றும் எம்.எஸ்.தோனி குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில், பிசிசிஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி தனது திறமைகளை அறிந்து என்னை அணியில் அங்கம் பெற செய்தார். ஆனால், என்னால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சொல்லமுடியுமா என்று அவர் அறியவில்லை. 


ஒரு மேட்ச்-வின்னிங் செயல்திறனை தன்னால் வழங்க முடியும் என்பதை  எப்போதும் தோனி அறிந்திருந்தார்.என்னை அணியில் ஒரு மூத்த ஆப்-ஸ்பின்னராக உணர செய்தார் என்றார். எனவே, என் வாழ்க்கையில் கங்குலி இல்லை என்றால் நான் அணியில் இல்லை.எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சௌரவ் கங்குலி என்னைக் கையாண்டார். ஆனால் தோனி கேப்டனாக ஆனபோது நான் அணியில் யார் என்பதை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண