கௌதம் கம்பீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கூறிய கருத்துக்கு ஹர்பஜன் சிங் சிரித்ததால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 


இன்றைய கால கிரிக்கெட் வீரர்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் காட்டி வரும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


கிரிக்கெட், அரசியல் காரணங்களுக்காக அப்ரிடி மற்றும் கம்பீர் அடிக்கடி ட்விட்டரில் வாயிலாக சண்டைவிட்டு கொள்வர். கடந்த 2007 ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் அப்ரிடி மற்றும் கம்பீர் சண்ரையிட்டு கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இருவரும் தங்களது ட்விட்டர் வாயிலாக ஒருவருக்கு ஒருவர் பதிலடி கொடுத்து வருகின்றனர். 


அந்த வகையில், நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது அப்ரிடி ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அப்ரிடி,“நான் எந்த இந்திய வீரர்களுடனும் சண்டையிட விரும்பமாட்டேன். ஆனால்,  சில சமயங்களில் கௌதம் கம்பீருடன் சமூக வலைதளங்களில் சில வாக்குவாதங்கள் நடக்கும். இந்திய அணியில் ஒருவருக்கு கூட பிடிக்காத ஒரு நபர் என்றால் அது கௌதம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். அந்த பேட்டியின்போது முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், மூத்த பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தாவுடன் ஆஜ் தக்கின் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் அப்ரிடியின் கருத்துக்கு சிரித்து விட்டார்.






இதனால் ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில், கவுதம் கம்பீருக்கு ஆதரவாகவும், ஹர்பஜன் சிங்கிற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


















மேலும், அப்ரிடி இந்தியாவை சேர்ந்த சக நாட்டவரை கேலி செய்யும் போது சிரித்ததற்காக ஹர்பஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.