வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய தன்னுடைய 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு முதல் 75வது சுதந்திர தினத்திற்கான கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்திய அரசு சார்பில் ‘ஆஷாதி க அமிர்த மஹோத்சவ்’ என்ற பெயரில் இந்த விழாக்கள் நடைபெற்று வருகின்றன. 


 


இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் பிசிசிஐக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு எதிராக இந்தப் போட்டி நடத்தப்படும் என்று கருதப்படுகிறது. 


 


இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தப் போட்டி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்தப் போட்டி தொடர்பாக பிசிசிஐ ஐசிசி மற்றும் பிற நாடுகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். ஆகவே இந்தப் போட்டி நடப்பது தொடர்பாக இன்னும் உறுதியான தகவல் இல்லை. 


 


ஐசிசியின் கூட்டம் வரும் ஜூலை 22 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ அதிகாரிகள் போட்டி தொடர்பான அனுமதியை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அந்தத் தொடர் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது. ஆகவே அந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. 


 


ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தப் போட்டியை நடத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆகவே பிசிசிஐ ஜிம்பாவே தொடர் தொடர்பாக யோசிக்க வேண்டியுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள பிரபலமான வீரர்கள் உலக லெவன் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்தப் போட்டி தொடர்பான அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண