தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் க்விண்டின் டி காக். தென்னாப்பிரிக்க அணிக்காக பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித்தந்துள்ளார். கடந்த சில காலமாக அவுட் ஆப் பார்மில் சிக்கித் தவித்துவரும் க்விண்டின் டி காக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
29 வயதே ஆன க்விண்டின் டி காக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஓய்வு குறித்து, இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேனும், அந்த அணியின் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர் கூறியிருப்பதாவது, “இது க்விண்டின் டி காக்கின் தனிப்பட்ட சொந்த முடிவு. ஆனால், ஒரு கிரிக்கெட் ரசிகனாக, க்விண்டின் டி காக்கின் மிகப்பெரிய ரசிகனாக இந்த முடிவால் அதிருப்தி அடைந்தேன். அவர் பேட்டிங் செய்வதையும், அவர் விக்கெட் கீப்பிங் செய்வதையும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதையும் பார்த்து ரசித்துள்ளேன். உலக கிரிக்கெட் அவரை இந்த வடிவத்தில் இருந்து மிஸ் செய்யும். ஆனாலும், அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததற்காக அவரை பாராட்டுகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவிற்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் ஆடியதுதான் அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும். டி காக் இனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். டெஸ்ட் 54 போட்டிகளில் மட்டும் 3 ஆயிரத்து 300 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 141 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 6 சதங்கள், 22 அரைசதங்கள் அடங்கும்.
124 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 355 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 16 சதங்கள், 26 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 178 ரன்களை எடுத்துள்ளார். 61 டி20 போட்டிகளில் ஆடி 11 அரைசதங்களுடன் 1827 ரன்கள் குவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் க்விண்டின் டி காக் இதுவரை 77 போட்டிகளில் ஆடி 1723 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 108 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch video : ‘உன் கைகள் கோர்த்து...’ - துபாயில் ஜாலியாக சுற்றி புத்தாண்டை கொண்டாடும் நயன் - விக்னேஷ்