தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் இழுத்து கட்டிப்போட்டுள்ளார். 


இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவே தெரிவித்திருந்தார். ஆனால் திருமணம் தொடர்பான செய்திகள் வெளிவரவே இல்லை. இதற்கிடையே இருவருமே தங்களது படங்களில் பிஸியாக வேலை செய்யத் தொடங்கினர். 


 


இந்தநிலையில் தற்போது விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் துபாய் புர்ஜ் கலீபாவில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 







முன்னதாக, இந்த ஜோடி சமீபத்தில் திருப்பதி சென்று ஆன்மீக விசிட் அடித்தது. தொடர்ந்து, வட இந்திய கோயில்களில் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஸ்ரீரடி, மும்பை தேவி, மகா லட்சுமி கோவில், சித்தி விநாயகர் ஆகிய கோயில்களுக்கு சென்றதாக குறிப்பிட்டார். தொடர்ந்து ஆன்மீக விசிட் அடிப்பதால் விரைவில் இந்த ஜோடி திருமண ஜோடியாக மாறப்போவதாகவும், விரைவில் திருமணத்தை அறிவிக்கப்போவதற்கான அறிகுறியே இந்த ஆன்மீக பயணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண