தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியதால், அவருக்கு பதிலாக குஜராத் வீரர் பிரியங்க் பஞ்சால் அணியில் இடம்பெற்றுள்ளார்.
யார் இந்த பிரியங்க் பஞ்சால்..?
பிரியங்க் பஞ்சால் 1990 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்தார். 31 வயதாகும் பஞ்சால் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் மீடியம் பாஸ்ட் பவுலர் ஆவார்.
2003-04 பாலி உம்ரிகர் டிராபியில் 15 வயதிற்குட்பட்டோருக்கான தனது முதல் கிரிக்கெட் ஆட்டத்தை பாஞ்சால் விளையாடினார். அதில் அவர் இரண்டு சீசன்களில் விளையாடினார். அடுத்து 17 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்றார். 2005-06 விஜய் மெர்ச்சன்ட் டிராபியின் கடைசி போட்டியில் அவர் சதம் அடித்தார். அடுத்த சீசனில், அவர் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் போட்டி மற்றும் மூன்று நாள் ஆட்டம் இரண்டிலும் விளையாடினார்.
கடந்த 2008 பிப்ரவரி 27 அன்று, லிஸ்ட்- ஏவில் முதல்முறையாக மஹாராஷ்டிராவிற்கு எதிராக விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்துக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் 115 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 123 ரன்கள் எடுத்தார்.
முதல் தர போட்டியில் அறிமுகம்
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சௌராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில், தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில், குஜராத் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நவம்பர் 2016 இல், குஜராத்துக்காக மும்முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்த மாதம், ஒரே ரஞ்சி கோப்பை சீசனில் 1,000 ரன்கள் எடுத்த குஜராத் முதல் வீரர் என்ற பெருமையை பஞ்சால் பெற்றார்
2016-17 ரஞ்சி டிராபி போட்டியில் அதிக ரன்கள் அடித்தார். 10 போட்டிகள் மற்றும் 17 இன்னிங்ஸ்களில் மொத்தம் 1,310 ரன்கள் எடுத்தார். 2017-18 ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 542 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார். ஜூலை 2018 இல், 2018-19 துலீப் டிராபிக்கான இந்தியா கிரீன் அணியில் இடம்பெற்றார்.
காத்திருப்பு வீரர்களில் ஒருவராக
2018-19 விஜய் ஹசாரே டிராபியில், 8 போட்டிகளில் விளையாடி 367 ரன்கள் எடுத்தார். 2018-19 ரஞ்சி டிராபியின் குரூப்-ஸ்டேஜில் குஜராத் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். 9 போட்டிகளில் 898 ரன்கள் எடுத்தார். 2019-20 துலீப் டிராபிக்கான இந்தியா ரெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2019-20 தியோதர் டிராபிக்கான இந்திய B அணியில் இடம் பெற்றார்.
ஜனவரி 2021 இல், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் ஐந்து காத்திருப்பு வீரர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.
சராசரி விவரம்
டெஸ்ட் அணிக்கு பாஞ்சாலின் முதல் அழைப்பு இதுவல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் 5 காத்திருப்பு வீரர்களில் ஒருவராக 31 வயதான பஞ்சால் இடம்பெற்றார்.
பாஞ்சல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாத முகமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா A அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். 100 முதல்தரப் போட்டிகளில் விளையாடிய ஒரு அனுபவமிக்க வீரர் ஆவார். கடந்த ஆண்டு பார்த்தீவ் படேல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, குஜராத் கேப்டன் பொறுப்பை பஞ்சால் ஏற்றுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்