Andy Roberts: பிசிசிஐ சொல்றதெல்லாம் செய்வீங்களா! ஐசிசி-ஐ சரமாரியாக கிழித்த முன்னாள் உலக சாம்பியன்
Andy Roberts: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான மற்றும் துபாயில் , ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டது, இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடநதது.

சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 க்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ததற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐசிசி) முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக சாடினார் .
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான மற்றும் துபாயில் , ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டது, இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடநதது. மேலும் 2024-2027 சுழற்சியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அனைத்துப் போட்டிகளும் நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று ஐ.சி.சி வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: IPL 2025 : இன்னும் ஆரம்பிக்கவே இல்ல! ஐபிஎல்-ல் இருந்து விலகும் பும்ரா, ராகுல்? காரணம் என்ன..
ஆண்டி ராபர்ட்ஸ் கருத்து:
மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் மூலம் இந்தியாவுக்கு சாதகமான போக்கை ஐசிசி கையாண்டதாக கடுமையாக விமர்சித்தார். கயானாவில் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் எங்ஜு விளையாடுவோம் என்பதை இந்தியா முன்கூட்டியே அறிந்திருந்ததால் இந்த வெற்றி அவர்களுக்கு பேரும் சவாலாக அமைந்தது.
"ஏதோ கொடுக்க வேண்டும்... இந்தியா எல்லாவற்றையும் பெற முடியாது. ஐ.சி.சி சில நேரங்களில் இந்தியாவை நோ என்று சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் கூட இந்தியாவுக்கு ஒரு நன்மை இருந்தது, அங்கு அவர்களின் அரையிறுதி எங்கு விளையாடப்படும் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர்," என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஐந்து சதங்கள் அடித்தும் மதிப்பில்லை...சாம்பியன்ஸ் ட்ரோபி வென்றதும் மனம் திறந்த ரோகித் ஷர்மா
"சாம்பியன்ஸ் டிராபியில், இந்தியா பயணம் செய்யவே இல்லை. ஒரு ஐசிசி தொடரில் போது ஒரு அணி எப்படி பயணம் செய்யாமல் இருக்க முடியும்?"அனைத்து அதிகாரங்களையும் பிசிசிஐ வசம் வைத்திருப்பதாகவும், ஐசிசி அவர்களின் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்கிறது என்றும் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக சாடினார்.
"எனக்கு, ஐ.சி.சி என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறிக்கிறது. இந்தியா எல்லாவற்றையும் ஆணையிடுகிறது. நாளை, இந்தியா, 'நோ-பால்கள் மற்றும் வைடுகள் இருக்கக்கூடாது' என்று சொன்னால், அவர்களின் வார்த்தையை, ஐ.சி.சி ஏற்று இந்தியாவை திருப்திப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்," என்று 74 வயதான ராபர்ட்ஸ் கூறினார்.
மைக்கேல் அத்தர்டன்:
முன்னதாக, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன், சாம்பியன்ஸ் டிராபியின் போது துபாயில் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடியதால் இந்தியா அணிக்கு சாதகமாக இருந்ததாக தெரிவித்தார்.
"துபாயில் விளையாடுவதில் இந்தியாவுக்கு நன்மை இருக்கிறது, இது எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் ஆனால் மறுக்க முடியாத நன்மை. அவர்கள் ஒரே ஒரு மைதானத்தில் மட்டுமே விளையாடுகிறார்கள். மற்ற அணிகள் செய்ய வேண்டியது போல, அவர்கள் மற்ற இடங்கள் அல்லது நாடுகளுக்கு இடையில் பயணிக்க வேண்டியதில்லை," என்று மைக்கேல் அத்தர்டன் விமர்சித்து இருந்தார்.