கார் விபத்தில் சிக்கிய இலங்கை வீரர்:
கார் விபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்தார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமன்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்ற போது அந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதேபோல், 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் அங்கம் வகித்தார். இவர் இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார்.
பலத்த காயம் - ரசிகர்கள் வேண்டுதல்:
இந்நிலையில் தான் திரிமன்னே காரில் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த லாரி இவரது கார் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இச்சூழலில் காரில் இருந்த திரிமன்னேவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் சிகிச்சை முடித்து அவர் மீண்டும் நல்ல நிலையில் வருவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இதனிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கினார். சாலை விபத்தில் சிக்கிய அவர் பல்வேறு விதமான சிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது தான் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!