நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ராஸ் டெய்லர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இவர் தன்னுடைய ஓய்வை அறிவித்த பிறகு தற்போது ‘ப்ளாக் அண்ட் ஒயிட்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. இந்தப் புத்தக்கத்தில் ராஸ் டெய்லர் பல்வேறு முக்கியமான விஷயங்கள் தொடர்பாக பேசியுள்ளார். 


இந்நிலையில் இந்தப் புதக்கத்தில் ஐபிஎல் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 195 ரன்கள் என்ற இலக்கை செஸ் செய்ய வேண்டி இருந்தது. அந்தப் போட்டியில் நான் டக் அவுட்டாகினேன்.  அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. 


 






இந்தப் போட்டிக்கு பிறகு அணியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது ஷேன் வார்ன் மற்றும் லிஸ் ஹார்லி ஆகியோரும் என்னுடன் இருந்தனர். அந்த சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் என் பக்கத்தில் வந்தார். அப்போது அவர், “ராஸ் டெய்லர் உங்களுக்கு நாங்கள் மில்லியன் கணக்கில் சம்பளம் தருவது இப்படி டக் அவுட் ஆவதற்கு இல்லை” என்று கூறினார். அத்துடன் அந்த நபர் என்னை 3 முதல் 4 முறை கன்னத்தில் அறைந்தார். 


அப்போது அந்த நபர் சிரித்து கொண்டிருந்தார். அவர் அடித்தது எனக்கு வலிக்கவில்லை. இருந்தாலும் அவர் நடிப்பது போல் தெரியவில்லை. அந்த சமயத்தில் நான் இதை பெரிது படுத்தவில்லை. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெறும் மிகவும் முக்கியமான விளையாட்டு நிகழ்வுகளில் நடைபெறாது என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


நியூசிலாந்து அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் and 102 டி20 போட்டிகளில் ராஸ் டெய்லர் களமிறங்கியுள்ளார். இவற்றில் மொத்தமாக 7683 டெஸ்ட் ரன்களும், 8607 ஒருநாள் ரன்களும் and 1909 டி20 ரன்களையும் அடித்துள்ளார். நியூசிலாந்து அணி சார்பில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ராஸ் டெய்லர் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண