மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று எவ்வளவு காலம் கடந்தாலும், இன்றும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை, ரசிகர்கள் அவரை ஒரு பார்வை கூட பார்க்க ஏங்குகிறார்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடந்தாலே இணையத்தில் படுவேகமாக வைரலாகும் காலம் இது.


 


அப்படி இருக்க, எம்.எஸ். தோனி டென்னிஸ் கோர்ட்டில் டென்னிஸ் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தோனி தனது ஷாட்கள் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதையும் வென்ற நிலையில், அவரது உடற்தகுதியும் அனைவரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் 16வது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. அதன்பிறகு, தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது,   முழுமையாக குணமடைந்து பொது இடங்களில் தோன்றி வருகிறார். 






மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டை தவிர, கால்பந்து, டென்னிஸ் மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளை விளையாடுவது அதிக அளவில் பார்க்கலாம். அவருக்கு கோல்ஃப் மற்றும் டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லிவிட்டு, தற்போது ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வருகிறார் தோனி. 






இந்திய அணி 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது, ​​தோனியின் தலைமையில் கடைசியாக ஐசிசி கோப்பையை வென்றது. 42 வயதாகும் தோனி இன்னும் ரசிகர்களின் இதயங்களை ஆள்கிறார், அதனால்தான் அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். சமீபத்தில், தோனி விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, ​​அமெரிக்க ஓபனில் கார்லோஸ் அல்கராஸின் ஆட்டத்தையும் ரசித்தார்.


போனி டெயிலுடன் தோனி: 






2007 ஆம் ஆண்டில், மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்தியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போது மகேந்திர சிங் தோனிக்கு நீண்ட முடி இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் போனி டெயிலுடன் தோனியை பார்த்ததும் ரசிகர்களின் பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது. 


2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் . இந்த சீசனில் தோனி விளையாடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, இதற்கு மிகப்பெரிய காரணம் அவரது சிறந்த உடற்தகுதி. 16வது ஐபிஎல் சீசனின் பட்டத்தை வென்ற பிறகு, தோனி முழுமையாக உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த சீசனிலும் விளையாடலாம் என்று கூறப்படுகிறது.