இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, குதிரை மற்றும் அதன் குட்டிக்கு உணவளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது


மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வு பெற்றதிலிருந்து விவசாயம் மற்றும் அவரது செல்லப்பிராணிகளுடன் நிறைய நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீப காலமாக தோனி, செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில், தோனொ தனது செல்ல குதிரைக்கு உணவளிக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


தோனியின் புதிய வீடியோ: 


மகேந்திர சிங் தோனி செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பிரியர் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவர் தனது நாய்களுடன் நேரத்தை செலவிடுவதையும், அவற்றுக்கு உணவளிப்பதையும், அவர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதையும் பலமுறை பார்த்திருக்கிறோம். அதேபோல், இத முறை தோனி தனது செல்ல குதிரையுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். தோனியுடன் இன்னும் சிலர் இருப்பது, அவருக்கு அருகில் ஒரு கருப்பு குதிரையும், குதிரையின் குட்டியுடன் நிற்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குதிரை தோனியின் கைகளை நக்குவதும், தோனி அதை ரசிப்பதும் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு தோனி குட்டிக்கு உணவளிப்பதைக் காணலாம்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வந்து, வந்தவுடன் வைரலாக பரவியது. மகேந்திர சிங் தோனி தனது புதிய மற்றும் நீண்ட முடியுடன் காணப்படுகிறார். மேலும் மக்கள் அதை சமூக ஊடகங்களிலும் வைரலாக்கி வருகின்றனர்.





ஐபிஎல் 2024 விளையாடுகிறாரா தோனி..?


மகேந்திர சிங் தோனி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது வரை ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் அவரை வருடத்திற்கு ஒரு முறை பார்த்து கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தோனி இனி விளையாட மாட்டார் என்ற கருத்து பரவி வரும் நிலையில், கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி 42 வயதில் கூட அவரை கேப்டனாக இருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸை 5 வது முறையாக சாம்பியனாக்கினார். கோப்பையை வென்றதற்கு பிறகும் கூட தோனி ஐபிஎல் 2024 இல் விளையாடுவதையும் சூசகமாகத் தெரிவித்திருந்தார். மேலும் ஐபிஎல் 2024 க்கான ஏலத்திற்கு முன்பு, 43 வயதான தோனி ஐபிஎல் 2024 இல் விளையாடுவார் என்பதை மீண்டும் தோனியைத் தக்கவைத்து அவருக்கு கேப்டன் பதவியை வழங்குவதன் மூலம் Csk தெளிவுபடுத்தியுள்ளது.