இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை தன்னுடைய 41-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஒவ்வொரு வருடமும் தோனியின் பிறந்தநாளைக்கு அவருடைய ரசிகர்கள் எதாவது வித்தியாசமான ஒன்றை செய்வது வழக்கம். 


இந்நிலையில் ஆந்திராவின் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த தோனியின் ரசிகர்கள் சிலர் 41 அடி உருவ படத்தை நிறுவியுள்ளனர். தோனியின் 41வது பிறந்தநாளைக்கு இந்த உருவ படத்தை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. 






குறிப்பாக 2018-ஆம் ஆண்டு சென்னையில் 30 அடி உருவ படம் வைக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டு கேரளாவில் 35 அடி உருவ படம் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவில் 41 அடி உருவ படம் அமைக்கப்பட்டுள்ளது. இது தோனியின் ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் தொடர்பான வீடியோவை பலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் பலரும் இது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக 2019ஆம் உலகக் கோப்பை அரையிறுதியில் களமிறங்கினார். அதன்பின்னர் அவர் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திடீரென்று  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஐபிஎல் தொடரில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார். ஆகவே அவரை மீண்டும் கிரிக்கெட் களத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண