இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான வீடியோ என்றால் சமூக வலைதளங்களில் எப்போதும் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் அவர் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இம்முறை முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மகள் குறித்த க்யூட் வீடியோ வெளியாகியுள்ளது. 



தோனிக்கு கிரிக்கெட்டை கடந்து அதிக அளவில் ரசிகர்களாக இருக்க காரணம் அவர் நடிக்கும் விளம்பரங்கள் தான். நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு இவரது நடிப்பு மற்றும் தன்னம்பிக்கை ஈர்க்கும் படியாக இருக்கும். அந்தவகையில், சிஎஸ்கே பேன்ஸ் பக்கத்தில் தோனி மற்றும் அவரது மகள் ஜிவா கொஞ்சிகொண்டு விளையாடிய வீடியோகாட்சி பகிரப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோ ஓரியோ பிஸ்கட் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






இதுகுறித்து, சிஎஸ்கே பேன்ஸ் பக்கத்தில் கேப்சனில் ஆஹா!! தல & ஜிவாவின் சூப்பர் அழகான வீடியோ !!! அடுத்த ஓரியோ விளம்பரத்தில் சிறந்த அப்பா,மகள் ஜோடி இடம்பெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். 


முன்னதாக, கடந்த வாரம் முன்னாள் கேப்டன் தோனியை வைத்து அன் அகாடமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 






அந்த வீடியோவில் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓடி கொண்டு தன் பாதையில் இருக்கும் சுவர்களை உடைத்து கொண்டு செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றது. இறுதியில் அவர் தன் பாதையில் இருக்கும் அனைத்து சுவர்களை உடைத்ததும் அவரை துரத்தி வந்த ரயில் மறைந்து போகும் வகையில் காட்சிகள் இடம்பெற்றது. அதாவது நம்முடைய வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து எரிந்து செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த வீடியோவை பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண