இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் சாரா டெய்லர் (Sarah Taylor), அவரது இணையர் டயானா பெற்றோராகி உள்ள தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
முன்னாள் விக்கெட் கீப்பர்:
சாரா டெய்லர் தனது இணையர் கர்ப்பமாக இருப்பதை டிவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். 2019 ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், சாரா தனது குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். இந்நிலையில், தன்பாலின காதல் தம்பதியினர் சாரா டெய்லர் - டெய்லர் இருவரும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளனர். இதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி வருகின்றனர்.
தனது இணையர் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை பகிந்துள்ள சாராவின் ட்விட்டர் பதிவில், “ தாயாக வேண்டும் என்பது என் இணையரின் நீண்டநாள் கனவு; விருப்பம். இந்தப் பயணம் எளிதானதல்ல என்பது எனக்குத் தெரியும். அவர் சிறந்த அம்மாவாக இருப்பார் என்பதை நான் அறிவேன். டயனாவின் இணையர் என்பதில் பெருமையடைகிறேன். இன்னும் 19 வாரங்கள் தான்..எங்களின் வாழ்க்கை மாறிவிடும்.” என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார்.
ஆடம் கில்கிறிஸ்ட் வாழ்த்து :
சாரா டெய்லர் - டயானா இணையர் பெற்றோராகியுள்ளதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“வாழ்த்துகள். இருவருக்கும் அற்புதனமான பயணம் காத்திருக்கிறது.” என்று கில்கிற்ஸ்ட் வாழ்த்தியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்திக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
” சாரா இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி, இருவருக்கும் எனது வாழ்த்துகள். “ என்று ஒருவர் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில், சிறந்த வீராங்கனையாக அடையாளம் காணப்பட்ட சாரா டெய்லர், மின்னல் வேக விக்கெட் கீப்பிங்கிற்காக பெரிதும் கொண்டாடப்பட்டவர். அவரது கரியரில், ”இந்த 2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட்டின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர் சாராதான்” என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டால் பாராட்டப்பட்டவர். 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சாரா - டயானா தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.