ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ். இவர் 1975ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் பிறந்தார். இவர் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் சில டி20 போட்டிகளில் அவ்வப்போது களமிறங்கி வந்தார். இவர் கடைசியாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீ சம்பவத்திற்கு நிதி திரட்டும் காட்சி போட்டியில் களமிறங்கியிருந்தார். அதன்பின்னர் இவர் கிரிக்கெட் களத்தில் களமிறங்கவில்லை.


 






இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற கார் விபத்தில் இவர் மரணம் அடைந்துள்ளார். இவர் குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில் பகுதியில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 46 வயதாகும் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் மறைவிற்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.






ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 1998ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை களமிறங்கினார். இவர் 198 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.  இவர் ஒருநாள் போட்டியில் 5088 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 1462 ரன்களும் எடுத்துள்ளார். இவை தவிர ஆஸ்திரேலிய அணிக்காக 14 சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்கி 337 ரன்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இவரை சக வீரர்கள் ராய் என்று அழைப்பார்கள். ஐபிஎல் தொடரில் இவர் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண