ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். இவர் கார் விபத்தில் நேற்று உயிரிழந்திருப்பத பலருக்கும் வேதனை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பற்றி அறியாத சில விஷயங்களை கீழே காணலாம்.



  • தத்து எடுக்கப்பட்ட சைமண்ட்ஸ் :


ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கரீபியன் தீவுகளில் பிறந்தவர். இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர் அவரை சிறு குழந்தையாக இருந்தபோது தத்து எடுத்தனர். இங்கிலாந்தில் சில காலம் வசித்த அவர்கள் பின்னர், சைமண்ட்சுடன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர்.



  • இங்கிலாந்து அணிக்கு தேர்வான சைமண்ட்ஸ் :




ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சிறு குழந்தையாக இருந்தபோது இங்கிலாந்தில் வளர்ந்ததாலும், அவரிடம் இங்கிலாந்தில் இருந்து சென்ற பாஸ்போர்ட் இருந்ததாலும் அவருக்கு இங்கிலாந்து ஏ அணியில் விளையாட வாய்ப்பு கிட்டியது. அப்போது, ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த சைமண்ட்ஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடச் சென்றால் தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலி அனைவரையும் விட்டுச்செல்வதற்கு சமம் என்று உருக்கமாக கூறினார்.



  • ஹைடனுடன் சென்று படகில் மூழ்கிய சைமண்ட்ஸ்:




மீன்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சைமண்ட்ஸ் ஒருமுறை பிரபல கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மற்றும் மற்றொரு நண்பருடன் ஆபத்தான நீர்நிலையில் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால், அங்கு படகு திடீரென மூழ்கியதால் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள சுறாக்கள் நிறைந்த நீர்நிலை என்று தெரிந்தும் மூன்று பேரும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர்பிழைத்தனர்.



  • மதுவால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய சைமண்ட்ஸ்


ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு இவரது மதுப்பழக்கத்தால் அணிக்கு தேர்வாகாமல் நீக்கப்பட்டார். 2009ம் ஆண்டு ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் குடித்துவிட்டு நியூசிலாந்து வீரர் ப்ரண்டன் மெக்கல்லமை தரக்குறைவாக பேசினார்.



  • ஹர்பஜன்- சைமண்ட்ஸ் சண்டை சர்ச்சை :




கிரிக்கெட் உலகிலே மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டவற்றில் மங்கிகேட் விவகாரம் ஒன்று. 2008ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆண்ட்ரூ சைமண்ட்சை பார்த்து இந்திய வீரர் ஹர்பஜன்சிங் குரங்கு என்று கூறியதாக எழுந்த குற்றச்சாட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உள்ளூர் மொழியில் ஹர்பஜன் கூறியது அவர்களுக்கு தவறாக புரிந்துகொள்ளபட்டதாக இந்திய வீரர்கள் விளக்கம் அளித்தனர். அதன்பின்னர், 2011ம் ஆண்டு ஹர்பஜன்சிங்கும், சைமண்ட்சும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினர்.



  • சன்னிலியோனுடன் பிக்பாசில் பங்கேற்ற சைமண்ட்ஸ்:




2011ம் ஆண்டு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரூ சைமண்ட்சும் பங்கேற்றிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண