இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து:


கடந்த 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் நேரடியாக மோத உள்ளன. அதன்படி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் நாளை ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் தொடர் ஹைதராபாத் நகரில் உள்ள ரஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. 


நாளை போட்டி தொடங்க உள்ள சூழலில் இங்கிலாந்து அணி தங்களது ஆடும் லெவன் வீரர்களை அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஆண்டர்சன் கழட்டிவிடப்பட்டுள்ளார். அதன்படி, நான்கு ஸ்பின்னர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி லெக்பிரேக் பவுலர் ரெஹான் அகமது, இடது கை ஸ்பின்னர்களான டாம் ஹார்ட்லீ, ஜேக் லீச் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேநேரம் வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்து அணியில் ஒரு ஒரு வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.





ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர்:


அதாவது அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட்டுக்கு மட்டுமே இடம் கிடைத்து இருக்கிறது. இதற்கான காரணம் நாளை விளையாட உள்ள மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரம், மார்க் வுட்டுக்கு இந்திய மண்ணில் விளையாடும் முதல் போட்டி இது என்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல் ஸ்பின் பவுலர்களை பொறுத்தவரை ஜேக் லீச் மட்டுமே இதற்கு முன்னர் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க் வுட்டுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் பந்துவீச உள்ளார்.


முன்னதாக, இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது அந்த போட்டியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஆலி போப் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்குகிறார்கள். இங்கிலாந்து அணியின் மற்றொரு ஸ்பின்னராக ஷோயிப் பசீர் சேர்க்கப்பட்டுள்ளார். விசா தாமதம் காரணமாக அவர் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், விசா பிரச்சனையை சரி செய்து இந்தியாவில் அவர் விளையாடுவார் என்று நம்புவதாக ரோகித் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs ENG: டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா ஆண்டர்சன்? காத்திருக்கும் அற்புத சாதனைகள்!


மேலும் படிக்க:India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்