இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 5வது டி-20 போட்டிக்குப் பிறகு, சர்வதேச போட்டிகளில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.


தொடரை இழந்து தோல்வி:


5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி தலா 2 போட்டிகளில் வென்று இருந்தன. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி சூர்யகுமாரின் அபார ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 18 ஓவர்களில் இலக்கை எட்டி, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.


01. 7 ஆண்டுகளில் முதல் இந்திய கேப்டன்:


2016ம் ஆண்டிற்குப் பிறகு டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி-20 என எந்த வகையான கிரிக்கெட்  தொடரையும், இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது இல்லை. இந்நிலையில், முதன் முறையாக பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, டி-20 தொடரை இழந்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான வெற்றி பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக, இந்திய அணி 15 தொடர்களை தொடர்ந்து வென்று வந்தது குறிப்பிடத்தக்கது.


02. அதிக ரன்கள் (50 இன்னிங்ஸ்)


நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதன்படி, 50 டி-20 இன்னிங்ஸ்களில் விளையாடிய பிறகு, அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


1943 – விராட் கோலி


1942 – பாபர் அசாம்



சூர்யகுமார் யாதவ் - 3


விராட் கோலி - 3


ரோகித் சர்மா - 3


04. கில் சறுக்கல்:


இதனிடையே, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற சுப்மன் கில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒரே அரைசதம் மட்டும் அடிக்க, மற்ற நான்கு போட்டிகளிலும் கில் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஒரு தொடரில் அதிக முறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற கே.எல். ராகுலின் சாதனையை கில் சமன் செய்துள்ளார்.


4 முறை - ஷுப்மன் கில் (2023 vs WI)
4 முறை - கேஎல் ராகுல் (2022 டி20 உலகக் கோப்பை)
3 முறை - ராபின் உத்தப்பா (2007 டி20 உலகக் கோப்பை)
3 முறை - சுரேஷ் ரெய்னா (2009 டி20 உலகக் கோப்பை)
3 முறை - முரளி விஜய் (2010 டி20 உலகக் கோப்பை)
3 முறை - கேஎல் ராகுல் ( 2021 vs ENG)
3 முறை - தினேஷ் கார்த்திக் (2022 டி20 உலகக் கோப்பை)


05. ஒரே இந்திய கேப்டன்:


டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி ஒரே தொடரில் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு தொடரில் 3 டி20 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார்.