இங்கிலாந்து நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன், தனது திறமையான பேட்டிங் மூலம் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். மோர்கனின் தலைமையின் கீழ் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போடிக்கான உலககோப்பையை வென்று அசத்தியது.




இந்த நிலையில், கடந்த சில மாத காலமாக இயான் மோர்கனின் பேட்டிங் பார்ம் மிகவும் கவலைக்குரிய வகையில் இருந்து வருகிறது. சமீபத்தில் நெதர்லாந்து அணியுடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் 2 போட்டிகளில் டக் அவுட்டாகினார். ஆஸ்திரேலியாவில் இன்னும் சில மாதங்களில் டி20 உலககோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனின் பேட்டிங் பார்ம் அணி நிர்வாகத்திற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.






தொடர்ச்சியான மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக இயான் மோர்கன் தனது கேப்டன்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நிருபர்களை மோர்கன் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது கேப்டன்சியில் இருந்து விலகும் முடிவை அவர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தனது ஓய்வு குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




இயான் மோர்கன் முதன்முதலில் அயர்லாந்து அணிக்காக அறிமுகம் ஆனார். 2010ம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், பின்னர் இங்கிலாந்து அணிக்காக ஆடினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்காக 35 வயதான மோர்கன் இதுவரை 248 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 14 சதங்களம், 47 அரைசதங்களும் அடங்கும் 115 டி20 போட்டிகளில் ஆடி 1805 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 14 அரைசதங்களும் அடங்கும். 83 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1146 ரன்களை அடித்துள்ளார். அவற்றில் 5 அரைசதங்கள் அடங்கும். மொத்தம் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்களுடன் 700 ரன்களை விளாசியுள்ளார்.


2012ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடாத மோர்கன் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். கடந்த சில மாத காலமாகவே மோசமான பார்மில் அவர் உள்ளார். இதனால், கடந்த ஐ.பி.எல். தொடரில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண