இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையே 2021ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதில் 5வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அந்தப் போட்டி வரும் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்தச் சூழலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக அவர் 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் கூடுதலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகியுள்ள ரோகித் சர்மா வரும் 29ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவார். அதன்பின்னர் அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நெகட்டிவாக வரும் பட்சத்தில் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கலாம். 


 






இருப்பினும் அவருடைய உடற்தகுதி ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். தற்போது ரோகித் சர்மாவும் இந்தப் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணியை பும்ரா வழி நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனினும் இது தொடர்பான இறுதி முடிவை தேர்வுக்குழு தலைவர் சேத்தம் சர்மா இங்கிலாந்து சென்றவுடன் எடுப்பார் என்று கூறப்படுகிறது. 


இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று விடும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண