சமீபகாலமாகவே இள வயதிலே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நல்ல ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடுபவர்கள் என பலரும் திடீரென உயிரிழப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் கிளப் அணிகள் உள்ளது. அதில் முக்கியமான கிரிக்கெட் கிளப் வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப்.






இங்கிலாந்து கவுண்டி கிளப் தொடரில் சோமர்செட் அணியும், வொர்செஸ்டர்ஷைர் அணியும் மோதி வருகின்றன. வொர்செஸ்ட்ஷைர் அணிக்காக ஆடியவர் ஜோஷ் பேக்கர்.  அவருக்கு வயது 20. இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வொர்செஸ்டர்ஷைர் அணி இதுவரை அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை கூறவில்லை.


சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அவர் நேற்று போட்டியின்போது, சோமர்செட் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.





நேற்று 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இன்று பரிதாபமாக உயிரிழந்தது கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஜோஷ் பேக்கர் 2021ம் ஆண்டு முதல் கிளப் அணிகளுக்காக ஆடி வருகிறார். இதுவரை அனைத்து வடிவ போட்டிகளிலும் 47 போட்டிகளில் ஆடியுள்ள ஜோஷ் பேக்கர் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சாளர் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கிய பேக்கர் இரண்டு அரைசதம் விளாசியுள்ளார். கிளெவ்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக ஆடி அதிகபட்சமாக 75 ரன்களை எடுத்துள்ளார்.


இவரது பந்துவீச்சுக்கு எதிராக ஒரு முறை பேட்டிங் செய்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இவரை பாராட்டி வாட்ஸ் அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மரணத்திற்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: IPL 2024 Points Table: தோத்தாலும் முதலிடத்தில் கெத்தாக ராஜஸ்தான்.. 5வது இடத்தில் சென்னை.. முழு புள்ளிகள் பட்டியல் இதோ!


மேலும் படிக்க: Watch Video: வெளியானது 2024 டி20 உலகக் கோப்பைக்கான தீம் பாடல்.. நடனத்தில் கலக்கும் கெயில், சந்தர்பால்..!