பிக் பாஷ் லீக் தொடரில் இங்கிலாந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஜேமி ஒவர்டன், அதிரடியாக விளையாடி அசத்தி வரும் நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் அவரை சென்னையின் போலார்ட் என்று அழைத்து வருகின்றனர்.
பிக் பாஷ் லீக்:
ஐபிஎல் கிரிக்கெட்டை போலவே ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும், ஐபிஎல்லை போலவே ஒவ்வொறு அணிகளும் மொத்தம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது ஐபிஎல் போல் அல்லாமல் நாக் அவுட் போட்டிகள் சற்று வித்தியாசமான முறையில் நடைப்பெறும். டாப் நான்கு இடங்களை பெறும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். குவாலிபையர், சேலஞ்சர், நாக் அவுட், இறுதிப்போட்டி என்கிற வகையில் போட்டிகள் நடைப்பெறும்.
இதையும் படிங்க: ICC Champions Trophy 2025: ஜெய்ஷாவிடம் பணிந்த பாகிஸ்தான்! ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள்..
ஜேமி ஓவர்டன்:
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வீரரான ஜேமி ஓவர்டன் விளையாடி வருகிறார். இவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் பேட்டிங் மற்றுக் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தி வருகிறார்.
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங்கில் 45 ரன்களும் பவுலிங்கில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார், அடுத்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் முக்கியமான கட்டத்தில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ஜேமி ஓவர்டன், அவர் 24 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அசத்தினார்.
சிஎஸ்கேவின் ஃபினிஷர்?
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஒரு நல்ல ஃபினிஷரை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஜேமி ஒவர்டன் பிக்பாஷ் தொடரில் ஆடி வரும் அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த குறை இனி இருக்காது என்று தெரிகிறது. அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொல்லார்ட் என்று சிஎஸ்கே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.