உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, நடந்த முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3 வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 


இந்தநிலையில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகியோர் முறையே  12.75 மற்றும் 14.50 என்ற சராசரியுடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக திணறி வருகின்றனர். அடுத்து நடைபெறும் மெல்போர்ன் டெஸ்டில் இவர்கள் இரண்டு வீரர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாக் க்ராலி களமிறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும், பர்ன்ஸ் மற்றும் ஹமீத் கடந்த எட்டு இன்னிங்ஸ்களில் ஆறு முறை ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே ஆட்டமிழந்துள்ளனர். இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்த ஜோடி, உதவி பயிற்சியாளர் ஆன்ட் போத்தாவின் கீழ் ஒரு தனித்துவமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.


 






அதன்படி, பர்ன்ஸ் மற்றும் ஹமீது வலை பயிற்சியின்போது ஒரு காலில் பேட்டிங் செய்து பயிற்சி செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சியை கிரிக்கெட் எழுத்தாளர் பாரத் சுந்தரேசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், "இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர் ஆண்ட் போத்தாவின் சில தனித்துவமான 'சமநிலை' சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் அவர்கள் ஒற்றைக் காலில் பேட்டிங் செய்வதும், ஹமீது ஒரு கட்டத்தில் ஒரு கால், ஒரு கையால் பேட்டிங் செய்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்" என்று பதிவிட்டிருந்தார். 


தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் பர்ன்ஸ் மற்றும் ஹமீத் ஒற்றைக் காலில் பேட்டிங் செய்த வீடியோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண