இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சனுக்கு வருகின்ற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தனது வருங்கால மனைவியை பிரேக் அப் செய்தவதாக அறிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக லாரன் ரோஸ் என்ற பெண்ணை காதலித்து லிவிங் டூ கெதரில் இருந்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2020 ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இவர்களது மகளின் பெயர் சியன்னா. 


8 வருட காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஒல்லி ராபின்சன் - லாரன் ரோஸ் வருகின்ற அக்டோபர் மாதம் திருமணம் செய்ய இருந்தனர். இந்த திருமணத்திற்காக பத்திரிக்கைகளும் அடிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுத்துள்ளனர். 






இந்தநிலையில், இப்போது ஒல்லி ராபின்சன் மற்றும் லாரன் ரோஸ் ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஒல்லி ராபின்சன் கடந்த 2 மாதங்களாக வேறு பெண்ணை காதலித்து வருவதாகவும், அதனால்தான் தனது காதலியை முறித்துக் கொள்ள முடிவு செய்ததாக சமூக ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. 


இதுகுறித்து சமூக ஊடகங்களில் கூறபட்டதாவது, “5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் போது தான் சந்தித்த ஸ்போர்ட்ஸ் இன்ஃப்ளூயன்சர் மியா பேக்கருக்காக தனது நீண்ட கால வருங்கால மனைவியை ஒல்லி ராபின்சன் பிரிந்துள்ளார். 8 வருடங்களாக காதலித்து வந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு அக்டோபரில் திருமணம் நடைபெற இருந்தது, அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.” என குறிப்பிடப்பட்டு இருந்தது. 


29 வயதாக ஒல்லி ராபின்சன், தனது சமூக ஊடக கணக்கிலிருந்து ரோஸ் உடனான அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இவர் இப்போது சமூக ஊடக செல்வாக்குமிக்க மியா பேக்கருடன் லிவிங் டூ கெதரில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, மியாவின் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார். ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து அணி தங்கியிருந்த ஹோட்டைல் மியாவுடன் ஒல்லியும் இருந்துள்ளார். 


யார் இந்த மியா பேக்கர்..?


முன்னதாக, மியா பேக்கரும் தான் காதலித்து வந்த நபரை பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். மேலும், மியா தற்போது வேறு ஒருவருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மியா பேக்கருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகளவிலான ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். அவர் கோல்ஃப் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்களுக்கே ஒல்லி ராபின்சன் லைக்ஸ் செய்து வருகிறார். 


ஒல்லி ராபின்சன்: 


இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் 2021 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.


இங்கிலாந்து அணிக்காக இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஒல்லி ராபின்சன், 76 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும், 3 இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.