கால்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகளில் யாரேனும் ஏதேனும் தவறு செய்தால் சிவப்பு அட்டை (ரெட் கார்டு) காண்பித்து அந்த வீரரை வெளியேற்றப்படுவார்கள். அதேபோல் தற்போது கிரிக்கெட்டிலும் சிவப்பு அட்டை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
ரெட் கார்டு:
வருகின்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் இருந்து கிரிக்கெட்டில் ரெட் கார்டு விதி அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஸ்லோ ஓவர் ரேட்டிற்கு இந்த ரெட் கார்டு விதி பயன்படுத்தப்படும் என்றும் சிவப்பு அட்டை விதி குறித்து லீக் அமைப்பாளர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதிய விதிகளின் படி, பீல்டிங் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச்சை முடிக்காவிட்டால், 20வது ஓவரின் தொடக்கத்தில் ஒரு பீல்டர் ரெட் கார்டு காமித்து களத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை.
கரீபியன் பிரீமியர் லீக்கின் செயல்பாட்டு இயக்குநரான மைக்கேல் ஹால், "எங்கள் டி20 போட்டிகளில் இது ஆண்டுக்கு ஆண்டு நீடிப்பதால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம், இதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். விளையாட்டை தொடர்ந்து வளர்ச்சியடையவதை உறுதிசெய்வது கிரிக்கெட்டுடன் இணைந்தவர்களின் கடமையாகும். போட்டிக்கு முன்னதாக இந்த கடமை குறித்து உரிமையாளர்களுக்கும் எங்கள் போட்டி அதிகாரிகளுக்கும் நாங்கள் உணர்த்தியுள்ளோம். ஸ்லோ ஓவர் ரேட்டிங்கின்போது அபராதம் விதிக்கப்படுவதற்கு பதிலாக, இவ்விதமாக செய்வது அவசியம் என தோன்றுகிறது” என்றார்.
விதி என்ன சொல்கிறது..?
கரீபியன் பிரீமியர் லீக் ஏற்பாட்டாளர்களின் விதிகளின்படி, 18வது இன்னிங்ஸின் தொடக்கத்தில் பீல்டிங் அணி தேவையான ஓவர்-ரேட்டிற்கு குறையாக பந்து வீசி இருந்தால், ஒரு பீல்டர் 30-யார்டு வட்டத்திற்குள் வர வேண்டும். இந்த வழியில் ஐந்து வீரர்கள் வட்டத்திற்குள் இருப்பார்கள்.
இதற்குப் பிறகு, 19-வது ஓவரின் தொடக்கத்தில் பீல்டிங் அணி தேவையான ஓவர்-ரேட்டிற்கு குறையாக பந்து வீசி இருந்தால், இரண்டு வீரர்கள் 30 யார்டு வட்டத்திற்குள் வர வேண்டும். இப்போது மொத்தம் 6 வீரர்கள் 30 யார்டு வட்டத்திற்குள் இருப்பார்கள்.
இதற்குப் பிறகு, 20வது ஓவரின் தொடக்கத்தில் கூட பீல்டிங் அணி மீண்டும் தேவையான ஓவர் விகிதத்திற்கு பின்தங்கியிருந்தால், அணி ஒரு பீல்டரை வெளியேற வேண்டும். அதாவது ஒரு வீரர் மைதானத்திற்கு வெளியே செல்வார். வெளியேறும் வீரரை கேப்டன் தேர்வு செய்வார். அதே நேரத்தில் 6 வீரர்கள் மட்டுமே வட்டத்திற்குள் இருப்பார்கள்.
அதே சமயம், பேட்டிங் அணிக்கு ஒரு போட்டியை நேரத்திற்குள் முடிக்க வேண்டிய கடமை உள்ளது. போட்டியை முடிப்பதற்காக நடுவர்கள் முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை கொடுப்பார்கள். பேட்டிங் செய்யும் அணி நேரத்தை வீணடிப்பதற்காக ஐந்து ரன்கள் அபராதம் விதிக்கப்படும்.
டி20 போட்டியின் நேரம் என்ன?
டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸுக்கு மொத்தம் 85 நிமிடங்கள் உள்ளன. இன்னிங்ஸின் 17வது ஓவர் 72 நிமிடங்கள் 15 வினாடிகளிலும், 18வது ஓவர் 76 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், 19வது ஓவர் 80 நிமிடங்கள் 45 வினாடிகளிலும் முடிக்கப்பட வேண்டும். மூன்றாவது நடுவர் நேரத்தைக் கவனித்து, கள நடுவர் மூலம் அணியின் கேப்டனுக்குத் தெரிவிக்கப்படும். ஓவர் முடிந்ததும், டிவி பார்வையாளர்கள் மற்றும் கூட்டத்தினரும் நேரத்தை குறித்து அறிவிப்பார்கள்.
கரீபியன் பிரீமியர் லீக் 2023 ஆகஸ்ட் 17 முதல் தொடங்குகிறது. இதன் முதல் போட்டி ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் செயின்ட் லூசியா இடையே நடைபெறுகிறது. தொடர்ந்து, கரீபியன் பிரீமியர் லீக் மகளிர் போட்டியானது ஆகஸ்ட் 31 முதல் தொடங்குகிறது.