இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ஆஷஸ் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவதைத் தடுக்க ஒரு சிறிய மாத்திரை வினை செய்ததாகக் கூறியுள்ளார். அவர் தனியாக விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, அவர் எடுத்துக் கொண்ட மாத்திரை அவரது சுவாசக் குழாயில் சிக்கியதால் ஏற்பட்ட பிரச்னை குறித்து கருத்து பகிர்ந்துள்ளார். 


இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும், டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் கலந்துகொள்ளாத பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் போட்டியில் பங்குபெறும் தனது எண்ணத்தை முன்பு வெளிப்படுத்தியிருந்தார். அவரது விரலில் ஏற்பட்ட காயம், மன நலத்தின் மீதான கவனம் ஆகியவற்றிற்காக பென் ஸ்டோக்ஸ் போட்டிகளில் இருந்து இடைவெளி விட்டு விலகியிருந்தார். தனது தொண்டையில் சிக்கிய மாத்திரையைப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வெளியில் எடுத்ததைக் குறித்து பென் ஸ்டோக்ஸ் பகிர்ந்துள்ளார். 



பென் ஸ்டோக்ஸ்


 


பிரித்தானிய செய்தி இதழான `டெய்லி மிர்ரர்’ நாளிதழில், பென் ஸ்டோக்ஸ், `ஒரு சிறிய மாத்திரை தவறுதலாகத் தொண்டைக்குள் சிக்கி, சுவாசக் குழாயை அடைத்ததால், அதனை வெளியேற்ற முகத்தின் மூலமாக அனைத்து முயற்சிகளும் எடுத்தேன். தொடர்ந்து அந்த மாத்திரை வெளியேறியது. அதுவே எனக்கு முடிவாக இருக்கும் என்று நான் எண்ணினேன். நாம் அனைவரும் இப்படியொரு பிரச்னையில் சிக்கியிருப்போம். அப்போதெல்லாம் நமக்கு உதவுவதற்காக நம்முடன் யாராவது இருப்பார்கள். ஆனால் நான் தனியாக இருந்ததால், என்னால் மூச்சுவிட முடியாமல், மாத்திரை கடுமையாக சிக்கிக் கொண்டது. எனது வாயில் நெருப்பு இருந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அதன்பிறகு மருத்துவர்கள் வந்த பிறகு, என் உடலில் என்ன நிகழ்ந்தது என்பதை விளக்கி சிகிச்சை அளித்தனர்’ என்று தனது தொடரில் குறிப்பிட்டுள்ளார். 


கடந்த ஜூலை மாதம், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ் எனப் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.



பென் ஸ்டோக்ஸ்


 


மாத்திரை சுவாசக் குழாயில் சிக்கிய பிரச்னை மட்டுமின்றி, பென் ஸ்டோக்ஸிற்கு மேலும் புதிய பிரச்னைகள் தொடர்ந்துள்ளன. கிரிக்கெட் பயிற்சியின் போது பயிற்சியாளர் ஜானதன் ட்ராட் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் கையில் பட்டதால், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டது. எனினும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.


அப்போது பென் ஸ்டோக்ஸ், `காலையில் மாத்திரையால் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு, கிரிக்கெட் பயிற்சி செய்வது புத்துணர்வைத் தரும் என மகிழ்ச்சியோடு இருந்தேன். ஆனால் அப்போது மீண்டும் ஒரு ஆபத்தான சம்பவம் நிகழ்ந்தது. எங்கள் பேட்டிங் பயிற்சியாளர் ஜானதன் கோச் வீசிய பந்து எனது கையில் வேகமாக பட்டதால் காயம் ஏற்பட்டது. கையைத் தூக்க முடியாமல் போனதால், நான் மிகவும் தவித்தேன். எலும்பு முறிந்துவிட்டது என எண்ணினேன்’ எனக் `டெய்லி மிரர்’ தொடரில் குறிப்பிட்டுள்ளர்.  


வரும் டிசம்பர் 8 அன்று, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ள ஆஷஸ் போட்டித் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் சார்பில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.