இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ரோகித்சர்மா தலைமையில் இங்கிலாந்து சென்றுள்ளது. ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த சூழலில், கடந்த ஜுன் 25 ம் தேதி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டது. இதையடுத்து இவர் தான் தங்கியிருக்கும் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து இவருக்கு பதிலாக இந்திய அணியினை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்தது. இந்த போட்டிக்கு விராட் கோலி, பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரிடம் கேப்டன்சி வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 






இந்தநிலையில், ரோகித் சர்மாவிற்கு பதிலாக தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இந்திய அணியின் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வால் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளது. 


முன்னதாக  இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத மயங்க் அகர்வால், திங்கள்கிழமை காலை இங்கிலாந்து புறப்பட்டு பர்மிங்காமில் உள்ள டெஸ்ட் அணியுடன் இணைந்தார்.மயங்க் அகர்வால் இன்று காலை இங்கிலாந்துக்கு புறப்படும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். கடைசியாக மயங்க் அகர்வால் பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான தொடரின் போது இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமாக இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார். 


இந்திய டெஸ்ட் அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பந்த் (Wk), கே.எஸ். பாரத் (Wk), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் ஷமி. பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, மயங்க் அகர்வால்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண