உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் குரூப் 2 பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்திய அணிக்கு எதிராக களமிறங்க உள்ள பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பட்டியலை அந்தநாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று வௌியிட்டுள்ளது.


பாபர் அசாம்:


1994ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி பிறந்த பாபர் அசாமிற்கு 27 வயதாகிறது. தனது திறமையால் அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ள பாபர் அசாம் 61 டி20 போட்டிகளில் 56 இன்னிங்சில் பேட் செய்து 2 ஆயிரத்து 204 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 1 சதமும், 20 அரைசதமும் அடங்கும். 9 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 122 ரன்களை குவித்துள்ளார்.


முகமது ரிஸ்வான் :


1992ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி பிறந்த முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஆவார். வலதுகை பேட்ஸ்மேனான அவர் இதுவரை 43 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 32 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளார். டி20 போட்டிகளில் ரிஸ்வான் 1,065 ரன்களை குவித்துள்ளார். 1 சதம் அடித்துள்ள அவர் 8 அரைசதங்களையும் விளாசியுள்ளார். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 108 ரன்களை குவித்துள்ளார்.




பக்கர் ஜமான்:


1990ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி பிறந்த பக்கர் ஜமான் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். அவர் இதுவரை 53 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அவற்றில் 48 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1,021 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 5 அரைசதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்துள்ளார். 1 போட்டியில் ஆட்டமிழக்காமல் பேட் செய்துள்ளார்.


ஆசிப் அலி:


1991ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி பிறந்த ஆசிப் அலி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். இளம் ஆட்டக்காரரான அவர் இதுவரை 29 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அவற்றில் 27 இன்னிங்சில் அவர் பேட் செய்துள்ளார். டி20 போட்டிகளில் இதுவரை 344 ரன்களை குவித்துள்ளார். தனது அதிகபட்ச ஸ்கோராக 41 ரன்களை எடுத்துள்ளார்.


ஹைதர் அலி:


பாகிஸ்தான் அணியின் மிகவும் இளைய வீரர்களில் ஒருவர் ஹைதர் அலி. 2000ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பிறந்த ஹைதர் அலி வலது கை ஆட்டக்காரர் ஆவார். இதுவரை 15 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 14 போட்டிகளில் பேட் செய்துள்ளார். டி20 போட்டிகளில் அவர் 256 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 66 ரன்களை எடுத்துள்ள ஹைதர் அலி இதுவரை 2 அரைசதங்களை அடித்துள்ளார்.




இமாத் வாசிம்:


பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவர் இமாத்வாசிம்.  1988ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி பிறந்த இமாத்வாசிம் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பந்துவீச்சாளர் ஆவார். இதுவரை 52 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இமாத் 36 போட்டிகளில் பேட் செய்துள்ளார். டி20 போட்டிகளில் 328 ரன்களை குவித்துள்ள இமாத் 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அதிகபட்சமாக 47 ரன்களை எடுத்துள்ளார். 52 போட்டிகளில் 51 போட்டிகளில் பந்துவீசியுள்ள இமாத் 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 14 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


முகமது ஹபீஸ் :


பாகிஸ்தானின் அனுபவ வீரர் முகமது ஹபீஸ். 1980ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி பிறந்த ஹபீஸ் இதுவரை 113 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 41 வயதான ஹபீஸ் 103 டி20 போட்டிகளில் பேட்டிங் செய்து 2 ஆயிரத்த 429 ரன்களை குவித்துள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான ஹபீஸ் டி20 போட்டிகளில் இதுவரை 14 அரைசதங்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 99 ரன்களை குவித்துள்ளார். சிறந்த ஆல் ரவுண்டரான முகமது ஹபீஸ் தான் ஆடிய டி20 போட்டிகளில் 75 போட்டிகளில் பந்துவீசியுள்ளார். அவற்றில் 60 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


ஷதாப் கான்:


1998ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி பிறந்துள்ள ஷதாப்கான் பாகிஸ்தானின் இளம் ஆல் ரவுண்டர். வலது கை பேட்ஸ்மேனான ஷதாப்கான் 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 22 போட்டிகளில் பேட்டிங் செய்து 226 ரன்களை குவித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 42 ரன்களை குவித்துள்ள ஷதாப்கான் 7 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். வலதுகை சுழற்பந்துவீச்சாளரான ஷதாப்கான் 53 போட்டிகளில் 49 போட்டிகளில் பந்துவீசியுள்ளார். அவற்றில் 58 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 14 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.





சோயிப் மாலிக் :


பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிகுந்த ஆல் ரவுண்டருமானவர் சோயிப் மாலிக். 1982ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி பிறந்த மாலிக் இதுவரை 116 டி20 போட்டிகளில் ஆடி 106 போட்டிகளில் பேட் செய்துள்ளார். டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 335 ரன்களை குவித்துள்ள மாலிக் 8 அரைசதங்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 75 ரன்களை குவித்துள்ள மாலிக் இதுவரை 31 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். தான் ஆடிய டி20 போட்டிகளில் 49 போட்டிகளில் பந்துவீசி 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 7 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


ஹரிஸ் ராஃப் :


1993ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி பிறந்த ஹரிஸ் ராஃப் வலதுகை வேகப்பந்துவீச்சாளர். அவர் 23 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 21 டி20 போட்டிகளில் பந்துவீசியுள்ள ஹரிஸ், இதுவரை 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




ஹசன் அலி:


1994ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி பிறந்த ஹசன் அலி பாகிஸ்தானின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர். 27 வயதான ஹசன் அலி இதுவரை 41 டி20 போட்டிகள் ஆடியுள்ளார். அவற்றில் 40 டி20 போட்டிகளில் பந்துவீசி 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


ஷாகின் ஷா அப்ரிடி:


2000ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி பிறந்த ஷாகின்ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியின் இளம் வீரர். இவர் இதுவரை 30 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 30 போட்டிகளிலும் பந்துவீசியுள்ள அவர் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 20 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.