வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டிஜே பிராவோ. இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 2004 ஆம் ஆண்டு தொடங்கினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதியில் ஒருநாள் போட்டியில் முதல் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கினார். அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியுற்றாலும் பிராவோவின் பந்துவீச்சு பேசும் பொருளானது. அதே ஆண்டு  இங்கிலாந்து எதிராக நடந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார் டிஜே பிராவோ. இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பிராவோ 3 சதங்கள் 13 அரைசதங்கள் 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 164 ஒருநாள் போட்டியில் விளையாடி 10 அரைசதங்கள், 2 சதங்கள் மற்றும் 199 விக்கெட்டும், 91 டி20 போடிகளில் விளையாடி 4 அரைசங்கள் மற்றும் 78 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்




விளையாடிய அணிகள்


வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளான டிஜே பிராவோ வெஸ்ட் இண்டீஸ் மட்டுமின்றி பல கிரிக்கெட் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்தியாவில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்காக விளையாடியது போல், டால்பின், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஹோர் காலண்டர்கள் போன்ற 42 அணிகளுக்கு விளையாடி உள்ளார். 


வெற்றி கோப்பைகள்


2004 ஆம் ஆண்டு நடந்த  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது வெஸ்ட் இண்டீஸ். இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 217 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவர் சிறப்பான பந்து வீச்சால் 2004 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது வெஸ்ட் இண்டீஸ். இதனையடுத்து 2012 மற்றும் 2016 நடந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இதிலும் முக்கியமாக 2012 ஆம் ஆண்டு இவர் பிடித்த கேட்சினால் மட்டுமே அணி வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அதிரடி ஆட்டம் ஆடிய டிஜே பிராவோ




 இந்தியாவில் ஐபிஎல் போல் தற்போது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற தொடர் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன. இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக டிஜே பிராவோ விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்  எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 6 விக்கெட்டுக்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


இவர்களை தொடர்ந்து களமிரங்கிய டிஜே பிராவோ தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்தை நாலாபுறமும் சிதறடித்த பிராவோ 39 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சீக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். இருப்பினும் மறுமுனையில் யாரும் சிறப்பாக ஆடாததால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது. இருப்பினும் டிஜே பிராவோ அதிரடியாட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றன.