தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய சையத் முஷ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிதமிழ்நாடு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. தமிழக வீரரான ஷாரூக்கான் அட்டகாசமாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்நிலையில், டிசம்பர் 8-ம் தேதி முதல் விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை தொடர் தொடங்க உள்ளது.
விஜய் ஹசாரா கோப்பையில் பங்கேற்க இருக்கும் தமிழ்நாடு அணியின் விவரம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பையில் இருந்து விலகினார். அதனால், விஜய் சங்கர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்போது விஜய் ஹசாரா கோப்பைக்கும் விஜய் சங்கரே கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
தமிழ்நாடு அணி விவரம்:
விஜய் சங்கர் (கேப்டன்), ஜெகதீசன் (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாரூக்கான், சாய் கிஷோர், எம் அஷ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், சித்தார்த், சாய் சுதர்ஷன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, முகமது, கெளசிக், சரவண குமார், சூர்ய பிரகாஷ், இந்திரஜித், சஞ்சய் யாதவ், கெளசிக் காந்தி, சிலம்பரசன்
காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த நடராஜன், சையத முஸ்தாக் அலி கோப்பையில் விளையாடினார். அவர் இப்போது விஜய் ஹசரே தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை.
இதுவரை நடைபெற்றுள்ள விஜய் ஹசாரா கோப்பை தொடர்களில், ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமிழ்நாடு அணி. 2020-21 சீசன் வின்னராக மும்பை இருக்கின்றது. இந்நிலையில், கடந்த 2016-17 சீசனில் கோப்பையை வென்றிருக்கும் தமிழ்நாடு அணி, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லுமா என்பதை பார்ப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்