இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு இந்தியளவில் அதிகமான ரசிகர் பட்டாளத்தை தனக்கென கொண்டுள்ளார். இவரது சில அசைவுகளும் கூட இரண்டு நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் அடிக்கும். தெய்வத்திற்கு மேலாக தோனியின் ரசிகர்கள் தோனியை கடவுளாக பார்க்கின்றனர். ஆங்காங்கே சிலையும் வைத்தும் வழிப்பட்டு வருகின்றனர். 


இந்தநிலையில், நேற்று கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி மெழுகு அருங்காட்சியகத்தில் மகேந்திர சிங் தோனியின் மெழுகு சிலையை பார்வையிட்ட ரசிகர் ஒருவர், அந்த தோனியின் மெழுகு சிலையுடன் புகைப்படம் எடுத்துகொண்டு அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நேற்று முதல் தற்போது வரை இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. 


அந்த புகைப்படத்தில் தோனியின் சிலையை பார்த்த சில பேர், ”தோனி என்று குறிப்பிடப்பட்டு, தோனிக்கு பதிலாக வேறு யாருடைய சிலையோ அங்கு உள்ளது” என்று கமெண்ட் செய்தார். அதேபோல் வேறு சிலர் ”இந்த சிலையை உருவாக்கிய கலைஞர் ஆதிபுருஷனுக்கு விஎஃப்எக்ஸ் உருவாக்கியவர் தான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.


மேலும் சிலர் “தோனியின் சிலை இது அல்ல, இது பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் சிலை என்றும், ”தோனி மற்றும் ரன்பீர் கபூருக்கு ஒரே சிலை இருந்தால் என்ன செய்வது" என்று கருத்து தெரிவித்தனர். 






















முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010 ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்தபோது அவருக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, சேவாக், கோலி, ரெய்னா, யுவராஜ் சிங் என பலருக்கும் அவரது ரசிகர்கள் சிலை அமைத்தனர்.