Deepak Chahar: ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சாஹர்? இதுதான் காரணமா?

Deepak Chahar: கணுக்காலில் ஏற்பட்டுள்ள விலகலால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பந்து வீச்சாளார் தீபக் சஹார் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

லக்னோவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்காலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக அணியின் வேகப்பந்துவீச்சாளார் தீபக் சாஹர் எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தீபக் சாஹர் விளையாட முடியாததால் இந்திய ஒருநாள் அணிக்கு அது பாதகமாக அமையும் என கூறப்படுகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக  மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியில், மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.   முதலில்  பந்து வீசிய இந்தியாவுக்கு 40 ஓவர்களில் 250 ரன்கள் இலக்கினை தென் ஆப்ரிக்க அணி நிர்ணயித்தது. அதன் பின்னர் பேட்டிங் செய்த   ஷிகர் தவானின் தலைமையிலான இந்திய அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் தீபக் சஹார் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

"கணுக்காலில் ஏற்பட்ட விலகலால் பாதிக்கப்பட்டுள்ள தீபக் சஹார், முதல் போட்டியில் விளையாடவில்லை. ஆனால் இப்போது இந்த காயத்தின் தன்மை தீவிரமடைந்து வருவதால், தென் ஆப்ரிக்கா உடனான மீதமுள்ள ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது என்று அறிவுருத்தியுள்ளனர். 

"ஏற்கனவே, டி20 உலகக் கோப்பை ஸ்டாண்ட்-பை பட்டியலில் தீபக் இருப்பதால், இனிவரும் ஒருநாள் போட்டிகளில் தீபக் சஹார் விளையாடமல் இருப்பது தான் நல்லது என அணி நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது.  தற்போதைய நிலவரப்படி, டி20 உலகக் கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் ஆஸ்திரேலியாவுக்கு தீபக் சஹார் சென்று அணியுடன் இணைவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், பும்ராவுக்கு பதிலாக அணியில் இணையவுள்ள முகமது ஷமி, அணியின் தேர்வுக் குழுவின் முழு பரிசோதனைகளுக்குப் பின்னர் தான் 2022ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த பும்ரா இடம் பெறவில்லை என்பதே இந்திய அணிக்கு பாதகமான நிலை, இந்நிலையில் தீபக் சஹாருக்கு கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம், அணியில் இன்னும் உறுதி செய்யப்படாத முகமது ஷமி என இன்னும் அணியே முழுமையாக தயார் ஆகவில்லை என்றே குறிப்பிட வேண்டும். இன்னும் முழுமையாகாத இந்திய அணியை வைத்துக் கொண்டு ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பையை வெல்வாரா எனும் மிகப் பெரிய கேள்வி இப்போது இருந்தே கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

Continues below advertisement