ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வாரம் அறிவித்தனர். 


இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி இன்று சென்னை வந்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த எந்த வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள தோனி சென்னை வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள தாஜ் கோராமெண்டல் ஹோட்டலுக்குள் தோனி எண்ட்ரியாகும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்களை சென்னை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருவதால் வைரலாகி வருகின்றன.


 










2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இம்முறை ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக உள்ளது. அதற்கு முன்பாக அடுத்த மாதம் வீரர்கள் மெகா ஏலம் நடைபெற உள்ளது. வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக 10 ஐபிஎல் அணிகளும் தங்களுடைய அணியில் சில வீரர்களை தக்கவைத்துள்ளனர். இதன்காரணமாக ஐபிஎல் ஏலத்தில் யார் யார் எந்த அணியில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


முன்னதாக ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு இம்முறை 1214 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அதில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. அதில் 896 இந்திய வீரர்களும், 318 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது. இதில் 61 பேர் இந்திய அணிக்காக விளையாடியுள்ள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண