இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் ஷாபாஸ் அகமது அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இவர் ஆட்டத்தின் 10வது ஓவரை வீசினார். அப்போது தென்னாப்பிரிக்கா அணியின் ஜானமேன் மலான் ஆடிவந்தார். அவர் ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறைக்கு முறையிட்டனர். அதை நடுவர் ஏற்கவில்லை. இதன்காரணமாக இந்திய அணி ரிவ்யூ எடுத்தது. அப்போது ஜானமேன் மலான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து நடுவரின் முடிவு மாற்றப்பட்டது. இதன்மூலம் ஷாபாஸ் அகமது தன்னுடைய அறிமுக போட்டியில் முதல் விக்கெட் எடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜானமேன் மலான் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த ரீசன் ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் எய்டன் மார்க்கரம் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. சற்று முன்பு வரை தென்னாப்பிரிக்கா அணி 25 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தியா :
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் , குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்.
தென்னாப்பிரிக்கா :
ஜான்மேன் மலான், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ் (கேப்டன்), ககிசோ ரபாடா, ஜார்ன் ஃபோர்டுயின் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே .
மேலும் படிக்க: விராட்கோலி, ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த பாபர் அசாம்..! பாக். ரசிகர்கள் உற்சாகம்...