ஆஸ்திரேலிய தொடக்க கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற போவதாக அறிவித்தார். இந்த ஓய்வானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடைசி டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சுற்றுப்பயணத்தின்போது மோசமான பார்மில் விளையாடிய டேவிட் வார்னர் அதன்பிறகு, இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். இந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 516 ரன்கள் குவித்தார்.
கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் டேவிட் வார்னர், இந்தியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
ஐபிஎல் தொடருக்கு பிறகு வார்னர் தற்போது லண்டனில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக உலகடெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த போட்டியானது ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு, டேவிர் வார்ன்ர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ சிட்னியில் உள்ள தனது சொந்த மைதானத்தில் ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து தனது டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க விரும்புவதாகவும், இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலக்கி கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் விலகினாலும், 2024 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட விரும்புகிறேன்” என தெரிவித்தார். 2024 உலகக் கோப்பை தொடர்தான் எனது இறுதி தொடராக இருக்கும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடன் நான் இங்கு ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து விளையாட முடிந்தால் நான் அந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட மாட்டேன் என்று உறுதியாக சொல்ல முடியும்.
வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஷஸ் தொடர் முடிந்ததும், பாகிஸ்தான் தொடரில் விளையாடி முடித்த பிறகு ஓய்வுபெற விரும்புகிறேன்” என தெரிவித்தார்.