டி20 உலக்கோப்பை தொடரில் இந்தியா, அரையிறுதிக்குச் செல்ல முடியாமல் வெளியேறியதற்கு பிறகு, முதல் தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி விலகியுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி மீது அதிக எதிர்ப்பு உள்ள நிலையில் இந்த தொடர் நடைபெறுகிறது.



இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் டி20 போட்டியில் இந்தியாவை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.



பின்னர் ஆடிய இந்திய அணி 20 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் அரை சதம் அடித்தார், கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  



இந்தநிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெறும்  இரண்டாவது போட்டி  ராஞ்சியில் (நாளை) நவம்பர் 19ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. ராஞ்சியில் நடைபெறும் இந்தப்போட்டியை  2வது டி20 போட்டியை ஒத்திவைக்க வேண்டும் அல்லது மைதானத்தில் பாதி அளவில் மட்டுமே போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக வழக்கறிஞர் தீரஜ் குமார் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (பிஐஎல்) தாக்கல் செய்தார். அதில், ராஞ்சியில் நடைபெறும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான  2 வது டி 20 போட்டி 100 சதவீத பார்வையாளர்களை நடைபெறுகிறது. எனவே, மைதானத்தில் பாதி அளவில் மட்டுமே போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 


மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் பல அலுவலகங்களில் கொரோனா வைரஸ் காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் பணிபுரியும் போது, ​​எந்த விதியின் கீழ் இந்தியா-நியூசிலாந்து 2வது டி20 போட்டிக்கு மாநில அரசு முழு ஆக்கிரமிப்பையும் அனுமதித்தது என்று அந்த மனுவில் கேள்வியும் எழுப்பி இருந்தார். 


ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் ஒரே நாளில் அனைத்தும் விற்று தீர்ந்தது. இந்தநிலையில், இங்கு நடைபெறும் போட்டிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருப்பதால் போட்டி நடைபெறுமா இல்லையா என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண