முதல் போட்டி:


 


இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தாவர் எம்.எஸ்.தோனி.  42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் ஐ.பி.எல் சீசன் 17 மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. 


இச்சூழலில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா மற்றும் பார்த்தீவ் படேல் ஆகியோர் சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து பேசியுள்ளனர். 


தோனிக்கு கிரிக்கெட் எல்லாமும் கிடையாது:


இது தொடர்பாக ஜாகீர் கான் பேசுகையில்,” நாம் மிகவும் விரும்பிய விளையாட்டில் இருந்து விலகிச் செல்வது எளிதானது அல்ல. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நேரம் முடிந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறிய நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தோனி வித்தியாசமானவர். கிரிக்கெட் தனக்கு எல்லாமே இல்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து கொண்டார்.


கிரிக்கெட் அவரது வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் அவர் மற்ற விஷயங்களையும் அனுபவிக்கிறார். அவர் பைக்குகள் மீது மோகம் கொண்டவர்” என்று பேசினார்.


சுரேஷ் ரெய்னா பேசுகையில், “எம்.எஸ் தோனிக்கு 42 வயதாகிறது, மஹி ஓய்வு பெறுவதற்கு முன்பு அந்த அணிக்கு புதிய கேப்டன் தேவை. தோனியை விட சிஎஸ்கேக்கு வரவிருக்கும் சீசன் முக்கியமானது. ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர் மற்றும் சிஎஸ்கேயை வழிநடத்தக்கூடியவர்.


தோனி அவரை அணியை வழிநடத்தச் சொல்லலாம் என்பதால், அனைவரது பார்வையும் அணியின் துணைத் தலைவர் மீதுதான் இருக்கும்.  தோனி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.


 


”எம்.எஸ் தோனி தன்னுடன் விளையாடும் சக வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். அவரது கவனம் பயிற்சி போட்டிகளில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் போட்டியின் முடிவை வெற்றிகரமாக முடிக்க கடினமாக உழைக்கிறார். நல்ல வீரர்களை அவர் தேர்ந்தெடுக்கிறார்” என்று பார்த்தீவ் படேல் கூறினார்.


 


 


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!