பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவதற்கான இறுதிப்போட்டியில் இந்தியா குவைத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
பெனால்டி ஷூட் அவுட்:
இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு ரசிகர்கள் அமோக ஆதரவை வெளிப்படுத்தினர். அரையிறுதியில் லெபனானை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முதலே இந்திய அணி மீது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.
இதன் காரணமாக, இறுதிப்போட்டி நடந்த பெங்களூர் காண்டீரவா மைதானத்தில் இந்திய அணியை உற்சாகப்படுத்த ரசிகர்கள் குவிந்தனர். ஆட்டம் நடைபெற்ற நேரத்தில் இரு அணியும் 1-1 என்று சமநிலையில் இருந்தபோது, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்காததால் மகுடத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.
வந்தே மாதரம்:
பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியா – குவைத் இரு அணிகளும் 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தபோது, குவைத் கேப்டன் கலீத் ஹாஜியா பெனால்டி ஷூட் அவுட் பந்தை உதைத்தார். கோல் கம்பத்தை நோக்கி வந்த அந்த பந்தை இந்திய கோல்கீப்பர் குர்ப்ரீத்சிங் சந்து அபாரமாக தடுத்தார்.
அதன்பின்பு, இந்தியா பெனால்டி ஷூட் அவுட்டில் 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அப்போது, மைதானத்தில் இந்திய சீருடையில் குவிந்திருந்த இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்திய வீரர்களை கண்டு வந்தே மாதரம் என்று ஒரு சேர உணர்ச்சி பொங்க கோஷம் எழுப்பினர். இது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது.
நெகழ வைத்த சம்பவம்:
சுமார் 20 ஆயிரம் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து வந்தே மாதரம் என்று உணர்ச்சிப்பொங்க முழக்கமிட்டது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. தெற்காசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய கேப்டன் சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜிங்கன், சாங்டே, சுபாஷிஷ் போஸ் மற்றும் மகேஷ் ஆகியோருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: World Cup Qualifiers: வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே... கடைசி இடம் யாருக்கு..? ஸ்காட்லாந்து - நெதர்லாந்து நாளை மோதல்!
மேலும் படிக்க: