உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தொடர்ந்து இந்திய அணி தனது அடுத்த சுற்றுப்பயணத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று விதமான தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 12 முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடக்கிறது. அதே நேரத்தில், இந்த சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி வீரர்கள் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்தனர். 


இந்திய வீரர்கள் சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்த வீடியோவை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்திய அணி தற்போது பார்படாஸில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அப்போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர் கார்பீல்ட் சோபர்ஸை முதலில் சந்தித்து பேசினார். இதையடுத்து, தலைமை பயிற்சியாளர் ராகுல், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் கைகுலுக்கி பேசினர்.






இதற்குப் பிறகு, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்து கைகுலுக்கினார். கோலி மற்றும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் இடையே சில உரையாடல்களும் நடந்தன. இதன் பிறகு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூரை அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு, இறுதியில், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ராகுல் டிராவிட் சர் கார்பீல்ட் சோபர்ஸுடன் பேசினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 


யார் இந்த சர் கார்பீல்ட் சோபர்ஸ்..? 


சர் கார்பீல்ட் சோபர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர். இவர் 1954 முதல் 1974 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். சர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 93 டெஸ்ட் மற்றும் 1 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 160 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த சர் கார்பீல்ட் சோபர்ஸ் 57.78 சராசரியில் 8032 ரன்கள் எடுத்தார். இதில், 26 சதங்களும், 30 அரைசதங்களும் சதங்களும் அடங்கும். மேலும் அவரது அதிகபட்ச ஸ்கோர் 365 நாட் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. 


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணி


ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், ரிதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.