இந்தியா முழுவதும் கடந்த 26ஆம் தேதி நாட்டின் 73ஆவது குடியரசுத் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழா தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவை அனைத்தும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் அந்த நாட்டு வீரர்களிடன் வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த கடிதத்தை பெறுவதற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். எனக்கு இந்தியாவை எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நான் பல நாட்கள் அந்த நாட்டில் மகிழ்ச்சியாக செலவிட நேர்ந்தது. சற்று தாமதம் தான் இருந்தாலும் இந்திய மக்களுக்கு என்னுடைய குடியரசு தின வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 






அதேபோன்று நேற்று தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் கேவின் பீட்டர்சன் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் பிரதமர் மோடியிடம் இருந்து வந்த கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “உங்களுடைய கடிதம் மற்றும் வார்த்தைகளுக்கு நன்றி. 2003ஆம் ஆண்டு நான் இந்தியாவில் முதல் முறையாக கால் பதித்தேன். அப்போது முதல் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்தியாவை எனக்கு அதிகம் பிடித்துள்ளது. சமீபத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது இந்தியாவில் எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நான் சற்றும் தயங்காமல் இந்திய மக்கள் எனக் கூறினேன்” எனப் பதிவிட்டுள்ளார். 






இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களின் பதிவுகளும் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கிரிக்கெட்டில் தில்லுமுல்லு.. ஃபிக்சிங்.. அசாருதீன் முதல் பிரெண்டன் டெய்லர் வரை நீளும் லிஸ்ட்!