ராணுவ அதிகாரியான சுரேந்திரநாத், 1955 முதல் 1969 வரையிலான கிரிக்கெட் வாழ்க்கையில் சர்வீசஸ் அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் விளையாடிய வெற்றிகரமான ஆரம்பகால கிரிக்கெட் விளையாட்டு வீரர். ராமன் சுரேந்திரநாத், ஜனவரி 4, 1937 இல் பிறந்தார், நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஸ்பெல்களை வீசும் திறன் மற்றும் தேவைப்படும் சூழ்நிலையில் பந்தை ஸ்விங் செய்யும் திறன் கொண்ட ஒரு மீடியம் பேஸ் பவுலர். ஆனால் ஃபிளாட், டெட் பிட்ச்களில் அவர் பந்துவீச்சு எடுபடாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முன்கூட்டியே முடிவுக்கு வந்தது என்று கூறுவார்கள். சிலர் சுரேந்திரநாத்தை துரதிர்ஷ்டசாலி என்று அழைப்பார்கள், ஏனெனில் அவர் மன்சூர் அலி கான் பட்டோடி விளையாடிய காலத்தில் நல்ல நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முன்பு மூன்று வருட காலப்பகுதியில் வெறும் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆடுகளம் மற்றும் நிலைமைகள் சாதகமாக இருந்திருந்தால் பந்துவீச்சில் சிறப்பாக செய்திருக்க முடியும் என்ற போதிலும், சுரேந்திரநாத்தால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் உதவாத இந்தியாவின் ஆடுகளங்களில் வெற்றிகரமாக பந்து வீசுவது கடினமாக இருந்துள்ளது. ராமன் சுரேந்திரநாத் என்று பெயர்கொண்ட அவர், சுரேந்திரநாத் ஆகிப்போனார். ராமன் என்ற பெயரை பெரிதும் யாரும் பயன்படுத்தாதால், அதை மறந்து போய் சுரேந்திரநாத் என்று மட்டுமே அழைக்க தொடங்கினர்.
மீரட்டில் பிறந்த , டீனேஜ் சுரேந்திரநாத், ராணுவத்தில் சேர்ந்த உடனேயே சர்வீசஸில் அறிமுகமானார். அவர் சதர்ன் பஞ்சாப் அணியை 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளுடன் வீழ்த்த உதவினார். அவர் அந்த சீசன் முழுவதும் நன்றாக விளையாடினார், மேலும் சர்வீசஸின் வெற்றி இறுதிப் போட்டியில் தான் நிறுத்தப்பட்டது. அந்த மராத்தான் முயற்சிகளில் ஒன்றை பம்பாய்க்கு எதிரான இறுதிப் போட்டியில் சுரேந்திரநாத் செய்துக்காட்டினார். அவர் 34 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து 2 விக்கெடுகள் எடுத்தார் மாதவ் மந்திரி மற்றும் ராம்நாத் கென்னி ஆகிய பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சில் வாழ்ந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக, பாம்பே மிகவும் வலுவான அணியாக இருந்தது, சர்வீசஸ் எதிர்பாராவிதமாக ஒரு இன்னிங்ஸில் தோற்றது.
அவர் 1958 இல் சர்வீசஸ் அணிக்காக விளையாடி, மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியில் முதல் மூன்று மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தபோது இந்திய அளவில் எல்லோர் கண்களுக்கும் தெரிய வந்தார். அதனைத் தொடர்ந்து பாட்டியாலாவுக்கு எதிராக 10 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்ததால் மேற்கிந்திய தீவுகள் உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிய முதல் இன்னிங்ஸில் 168 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார், அப்போது ஒரு விக்கெட்டுக்கு மேல் எடுத்த ஒரே இந்திய பந்துவீச்சாளர் அவர்தான். பின்னர் அவர் ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் 14 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் எடுத்து, நான்காவது டெஸ்டில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த முறை மேற்கிந்தியத் தீவுகள் அணி பெட்ரா மற்றுமொரு பெரிய வெற்றியில் சுரேந்திரநாத் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை, அதனால் அவர் ஐந்தாவது டெஸ்டுக்கான இடத்தை இழந்தார்.
1959 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் அப்போதைய முக்கிய பந்துவீச்சாளரான ரமாகாந்த் தேசாய் உடன் அனைத்து ஐந்து டெஸ்டிலும் இடம்பெற்றார், மேலும் 26.62 சராசரியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்களில் முன்னிலை வகித்தார். நான்காவது டெஸ்டில் அவர் முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 115 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தார், ஐந்தாவது ஆட்டத்தில் அவர் இங்கிலாந்தின் ஒரே இன்னிங்ஸில் 51.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தார், அதே போல் தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 27 ரன்களை எடுத்த அவர், எட்டாவது விக்கெட்டுக்கு நரேன் தம்ஹானே உடன் இணைந்து 58 ரன்களைச் சேர்த்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்த போது இந்த கூட்டணி அமைந்தது. விஸ்டன் குறிப்பிட்டது, "உடல் ரீதியாக நன்றாக இல்லாமல் இருந்த போதிலும் அவர் நீண்ட பந்துவீச்சு ஸ்பெல்களை எதிர்கொண்டார்," என்று விஸ்டன் குறிப்பிட்டது.
அவர் 1959-60 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், ஆனால் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்ததனால், டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 1960 டிசம்பரில் ரஞ்சி கோப்பை போட்டியின் முதல் நாள் காலையில் டெல்லி அணிக்கு எதிராக 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்த பிறகு, 1960-61ல் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டுக்கான அணிக்குத் திரும்பினார்.
அவர் மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 46 ஓவர்கள் பந்து வீசி 93 ரங்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்தார், அவர் மீண்டும் தேசாயுடன் தாக்குதலை தொடங்கினார், ஆனால் அடுத்த மூன்று இன்னிங்ஸ்களில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் எடுத்து மீண்டும் அணியில் தனது இடத்தை இழந்தார். அவர் 1961-62ல் தனது ஒரே ஒரு முதல்தர சதத்தை அடித்தார், தெற்கு பஞ்சாப்க்கு எதிராக 119 ரன்கள் எடுத்திருந்தார், ஆனால் முழு சீசனிலும் 15.58 சராசரியில் மொத்தம் 187 ரன்கள் மட்டுமே குவித்தார். ஆனால் பந்துவீச்சில் 28.04 சராசரியில் 22 விக்கெட்டுகளையும் எடுத்தார், ஆனாலும் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை. அதன்பிறகு அவர் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது, ஆனால் 1967-68 இல் ஐந்து ரஞ்சி டிராபி போட்டிகளில் அவர் 13.44 சராசரியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வீசஸ் அணி அரையிறுதிக்கு செல்ல உதவினார்.
இறுதி மண்டலப் போட்டியில், ரயில்வேஸை முந்திக்கொண்டு இறுதிப் போட்டிக்கு வருவதற்கு சர்வீசஸ் அணிக்கு குறைந்தபட்சம் இன்னிங்ஸ் வெற்றி தேவைப்பட்டபோது, அப்போது சர்வீசஸ் 207 ரன்கள் குவித்திருந்தது, அந்நிலையில் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்து, ரயில்வேயை 114 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது இன்றளவும் மறக்கப்படாத ஆட்டமாக உள்ளது. அவர் 1968-69 வரை சர்வீசஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடினார், மேலும் அவர் எல்லா போட்டிகளிலும் நேர்த்தியான ஆட்டத்தை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
சுரேந்திரநாத் தனது கடைசி இரண்டு சீசன்களில் இருந்து 15.31 என்கிற சராசரியில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றபோது அவருக்கு வெறும் 31 வயது. இந்திய ராணுவத்தில் கர்னலாகவும், இந்திய அணிகளின் மேலாளராகவும் பணியாற்றினார். சுனில் கவாஸ்கர் 'ஒன் டே ஒண்டர்ஸில்' அவரைப் பற்றி எழுதியது, "சூரி என்று, சுரேந்திரநாத் அன்புடன் அழைக்கப்படுவதால், வாழ்க்கையின் பிரகாசமான ஒளிகள் வீசும் பக்கங்களாக எல்லோரும் பொறாமைப்படக்கூடிய அதிசயமான குணங்கள் அவரிடம் உள்ளது, மேலும் அவரால் மகிழ்ச்சியான மனநிலையைத் தவிர வேறெதுவும் இல்லாமல் தனது அறையை விட்டு வெளியேற முடிகிறது", என்று எழுதியிருந்தார். சுரேந்திரநாத் நீண்டகால உடல்நலக்குறைவால் 75 வயதில் மே 5, 2012 அன்று புது தில்லியில் காலமானார்.