இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்காக தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. ஆட்டத்தின் முதல் நாளான நேற்று இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்று ஆட்ட நேர இறுதியில் அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 75* ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 171 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அசத்தினார். அத்துடன் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார். 


இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததை பாராட்டும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூன்று பேரு நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மூன்று சிறப்பாக பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவை பதிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயர் செய்யும் ஒவ்வொரு நகர்த்தலும் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். 


 






இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் சதம் கடந்த வீரர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். தற்போது அவரை போல் மற்றொரு மும்பை வீரரான ஸ்ரேயாஸ் ஐயரும் அறிமுக டெஸ்டில் சதம் கடந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: லாதம், யங் நிதானத்தால் நியூசி., 129/0 ; விக்கெட் எடுக்க முடியாத ஏமாற்றத்தில் இந்தியா