தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்காரணமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் தங்களுடைய இல்லங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் தொடர்பான படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பொங்கல் பண்டிகைக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பொங்கலாய் மகிழ்வு பொங்கட்டும். உயிர் கொடுக்கும் உழவே நீ வாழ்க! உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்ற ஔவையின் வாக்கு வாழ்க! பொங்கலோ பொங்கல்..!!!! "தமிழும், தமிழர்களும் வாழ்க!!! வளர்க" எனப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இந்தப் பதிவுடன் சேர்ந்து அவர் வேட்டி சட்டை அணிந்து தமிழில் வாழ்த்தும் தெரிவிக்கிறார். இந்த வீடியோ அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதிலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்த பிறகு ஹர்பஜன் சிங் அடிக்கடி தமிழில் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அத்துடன் ஹர்பஜன் சிங் தமிழில் கதநாயகனாக ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்கு தமிழ் மக்கள் மீது எப்போதும் அதிகம் ஆர்வம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க: தரைய தொட டா மொமண்ட்! - க்ளீன் போல்டான லபுஸ்சென் - மீம்ஸ்களால் தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்